Shoot The Kuruvi விமர்சனம்
மதிவாணன் இயக்கத்தில் Shoot The Kuruvi திரைப்படம் ShortFlix Youtbe தளத்தில் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்தில் Arjai,Suresh Chakaravarthi,Vj Ashiq ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்துள்ளனர்.இந்த படம் காமெடி கலந்த ஒரு Crime திரில்லர் படமாக உள்ளது.காமெடி என்பது அடுத்தவரைக் கலாய்ப்பதுவேயன்றி வேறில்லை’ என்றாகிவிட்ட தமிழ் சினிமாவில், கதை வேறு காமெடி வேறல்ல என்பதை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார் மதிவாணன்.
முன்பெல்லாம் ஒவ்வொரு படத்தின் பிரஸ்மீட் அல்லது பாடல் வெளியீட்டின் போதும் அந்தப் பட இயக்குநர்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை வித்தியாசம். ஆனால் படம் வெளியான பிறகு பார்த்தால் அப்படி ஏதாவது இருந்ததா என யோசிக்க வேண்டியிருக்கும். பெரிய ஹீரோ, டாப் இயக்குநர் படங்களே கூட இதற்கு ஆனால் இப்போது அந்த வித்தியாசம் பிடிபட ஆரம்பித்துள்ளது. காரணம் புதிய களம், புதிய காட்சியமைப்புகளை மனதில் பதித்து, அதை அப்படியே பிடிவாதமாக திரையில் வார்த்தெடுக்கும் அபார கற்பனை வளத்துடன் வரும் இயக்குநர்கள். அந்தப் பட்டியலில் மிக சமீபமாக இடம்பிடித்துள்ளவர் மதிவாணன்.
முதல் பாதியில் நேரத்தைக் கொல்ல வேண்டியிருப்பதுதான் இந்தப் படத்தின் ஒரே குறை. இன்னொன்று.. குறையென்று சொல்ல முடியாது… இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என சொல்ல வைப்பது இசை. படத்தின் இயக்குநர்தான் எடிட்டர். இரண்டாம் பாதியில் கொடுத்த வேகத்தை, முதல் பாதியிலிருந்தே தொடர்ந்திருக்கலாம்.
ஹீரோயிசம் என்பதை வெளிப்படையாகக் காட்டாமல் ஹீரோயிசம் பண்ண வைத்துள்ளார்கள். அதைப் புரிந்து நடித்திருக்கிறார் ஹீரோ.அவருக்கு தரப்பட்டுள்ள வசனங்கள் மற்றும் அதை அவர் பேசும் லாவகம் மனதை அள்ளுகிறது.படத்தின் நிஜமான ஹீரோ இயக்குநர்தான். அவரது வசனங்களும் திரைக்கதையும் ஒரு சாதாரண கதையை வேறு தளத்துக்கு கொண்டு சென்றுள்ளன.படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. பல இடங்களில் பக்குவமற்ற காட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
மனதில் இந்தப் படம் இப்படித்தான் இருக்கும் என்ற எந்தவித எதிர்ப்பார்ப்பு இல்லாமல் ரசிக்கலாம்.தமிழ் சினிமாவின் காலை அவ்வப்போது சிலர் குழிக்குள் இழுக்கப் பார்த்தாலும். இதோ நாங்கள் இருக்கிறோம் என சொல்லிக் கொண்டு கெத்தாக முன் நிற்கிறார்கள் மதிவாணன் மாதிரி இயக்குநர்கள். ரியல் ஹீரோக்கள் இவர்கள்தான். வாழ்த்துகள்!