சாய் பல்லவியை பாராட்டிய பா. இரஞ்சித்
பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி பிரலமான சாய் பல்லவி நடித்து ஜூன் 17ஆம் தேதி வெளியான படம் விராட பருவம். இப்படத்தில் அவர் நக்சல் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். படமும், சாய் பல்லவியின் நடிப்பும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கிடையே படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி அளித்த சாய் பல்லவி, “நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தவள். இடதுசாரி, வலதுசாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், யார் சரி, யார் தவறு என்று சொல்ல முடியாது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் காஷ்மீரி பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை காட்டுகிறது.
சமீபத்தில், பசுவை கொண்டு சென்ற நபர் ஒருவர் இஸ்லாமியர் என சந்தேகப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த நபரைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பினர். காஷ்மீரில் நடந்ததற்கும் சமீபத்தில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம்” என கேள்வி எழுப்பியிருந்தார்.
சாய் பல்லவியின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்தது. மேலும் அவரை கைது செய்ய வேண்டுமெனவும் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டது.இப்படிப்பட்ட சூழலில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,“சில தினங்களுக்கு முன்பு நான் தெரிவித்த கருத்து சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் ஒன்று என்பதைத்தான் பேட்டியில் தெரிவித்தேன்.