சாய் அப்யங்கரின் மலையாள சினிமா அறிமுகப் பாடல் – “ஜாலக்காரி”(Jaalakaari) வெளியானது

“கச்சி சேரா (Kachi Sera),” “ஆச கூட (“Aasa Kooda),” “சித்திர பூத்திரி (Sithira Poothiri),” “விழி வீழுது” (Vizhi Veezhudhu) போன்ற வைரல் ஹிட் சிங்கிள்களால் 21 வயதிலேயே சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்ற சாய் அப்யங்கர், இப்போது தனது முதலாவது மலையாள சினிமா பாடலை வெளியிட்டுள்ளார். ஷேன் நிகம் ( Shane Nigam) நடிக்கும் “பல்டி” படத்தில் இடம்பெறும் “ஜாலக்காரி” பாடல் வெளியானவுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வினாயக் சசிகுமார் (Vinayak Sasikumar) எழுதியுள்ள இந்தப் பாடலை, சாய் அப்யங்கர் (Sai Abhyankar) தானே இசையமைத்து, சாய் மற்றும் “கூலி” படத்தின் ஹிட் பாடல் “மோனிகா” m-வைப் பாடிய சுப்லாஷினி (Subhlashini ) இணைந்து பாடியுள்ளனர். சாயின் அறிமுகப் புரமோ வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் 4 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. இப்போது “ஜாலக்காரி” அதிகாரப்பூர்வ வெளியீட்டுடன், இசை ரசிகர்கள் இதுவே அடுத்த வைரல் ஹிட் ஆகுமா என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரினியின் மகனான சாய், யூடியூபில் ஏற்கனவே சாதனைகளைப் படைத்துள்ளார். “கச்சி சேரா” மற்றும் “ஆச கூட” சிங்கிள்கள் மட்டும் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளன. “ஜாலக்காரி” மூலம் சாய் அப்யங்கர், மலையாளத் திரையுலகில் தனது இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாகக் அறிவித்துள்ளார்.
உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) இயக்கும் “பல்டி”, எஸ்டிகே ஃப்ரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ்
அலெக்சாண்டர் (Binu George Alexander) புரொடக்ஷன்ஸ் சார்பில் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிக்கின்றனர். ஷேன் நிகம் இதுவரை நடித்த படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், இசை, ஆக்ஷன் மற்றும் மலையாளம்–தமிழ் நட்சத்திர அணியை ஒருங்கே கொண்டு வருகிறது. இது ஷேன் நிகமின் 25வது படமாகும்.
சாய் அப்யங்கர், தற்போது மலையாள அறிமுகத்துடன், தமிழ் சினிமாவில் பல பெரிய திட்டங்களில் பணிபுரிந்து வருகிறார். அதில் லோகேஷ் கனகராஜின் “பென்ஸ்”, சூர்யா நடிக்கும் “கருப்பு”, சிலம்பரசனின் “STR 49”, அல்லு அர்ஜுன் – அட்லீ இணையும் படம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “டூட்” ஆகியவை அடங்கும். இருந்தாலும், “ஜாலக்காரி” என்ற பாடல், அவரது முதலாவது திரைப்பட இசை அமைப்பும், பிளேபேக் பாடகராகும் அறிமுகமாக என்றும் நினைவில் நிற்கும்.
பல்டி படத்தில் வில்லன் கதாபாத்திரம் சோடா பாபுவாக அல்போன்ஸ் புத்ரன், குமாராக ஷாந்தனு பக்யராஜ், பயிரவனாக இயக்குநர்-நடிகர் செல்வராகவன் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் புரமோ வீடியோக்கள், கதாபாத்திர க்ளிம்ப்ஸ் ஆகியவை ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தின் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக கிஷோர் புரக்கத்திரி, முதன்மை துணை இயக்குனராக ஸ்ரீலால். துணை இயக்குனர்களாக, சபரிநாத், ராகுல் ராமகிருஷ்ணன், சாம்சன் செபாஸ்டின் மற்றும் மெல்பின் மேத்யூ பணியாற்றுகின்றனர். இப்படத்தின் கலை இயக்குனராக ஆஷிக்.S, கூடுதல் வசனகர்த்தாவாக T.D.ராமகிருஷ்ணன் மற்றும் க்ரியேடிவ் தயாரிப்பாளரக வாவா நுஜுமுதீன் பணியாற்றிகின்றனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம் :
ஒளிப்பதிவு : அலெக்ஸ் ஜே. புலிக்கல் (RDX: Robert Dony Xavier புகழ்)
எடிட்டிங் : சிவ்குமார் வி. பானிக்கர்
இணை தயாரிப்பாளர் : ஷெரின் ரேச்சல் சாந்தோஷ்
நிர்வாக தயாரிப்பு : சந்தீப் நாராயண்
DI : கலர் பிளானெட்
ஆடை : மெல்வி J
ஒலி வடிவமைப்பு & மிக்ஸ் : விஷ்ணு கோவிந்த்
கலை இயக்கம் : ஆஷிக் எஸ்.
சண்டை : ஆக்ஷன் சாந்தோஷ் & விக்கி மாஸ்டர்
நடன இயக்கம் : அனுஷா
இசை உரிமை : திங்க் மியூசிக்
மேக்-அப்: ஜிதேஷ் பொய்யா
ஸ்டில்ஸ் : சஜித் R M
கலரிஸ்ட்: ஸ்ரிக் வாரியர்
VFX : Accel Media, Foxdot Media
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் : பென்னி கட்டப்பண்ணா
CFO : ஜோபீஷ் ஆண்டனி
COO : அருண் சி தம்பி
வெளியீடு: மூன்ஷாட் என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்.
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: வியாகி
டைடில் வடிவமைப்பு : ராக்கெட் சயின்ஸ்
ப்ரோமோஷன் : Snakeplant LLP
மக்கள் தொடர்பு : யுவராஜ்