Now Reading
ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் திரு.வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக திரையரங்குகளில் 25-ஆவது நாளை நிறைவு செய்தது.

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் திரு.வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக திரையரங்குகளில் 25-ஆவது நாளை நிறைவு செய்தது.

விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதில், ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சி அடைகிறது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஆதரவளித்த ரசிகர்கள்,பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரை உலக நண்பர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

“விடுதலை’’ஆழமான கதையும், எளிய மக்களின் வாழ்க்கைமுறையும், அரசியல் களத்தின் உண்மைதன்மையும் தைரியமாக வெளிபடுத்தியத்தின் மூலம் தனித்தன்மை காட்டியது

விடுதலை பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய இரண்டிற்கும் கிடைத்த பரவலான வரவேற்பும் உணர்வுபூர்வமான திரைப்படங்களுக்கு கிடைக்கும் மக்களின் ஆதரவும் எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது.

விடுதலை பாகம் 2 மிகவும் லாபகரமான படமாக எங்கள் நிறுவனத்திற்கு அமைந்ததில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் சினிமாவாக விடுதலை பாகம் 1 & 2 வழங்கியதில்
நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தில் மீண்டும் ஒரு வெற்றிகரமான மைல்கல்.

இந்த மகிழ்ச்சியான தருணதில், இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு,
அவரின் ஆழமான கதை, திரைக்கதை மற்றும் இயக்குனராக சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் படத்தை கையாலும் முறையிலும் விடுதலையை இயக்கி வெற்றிபடமாக்கிய எங்கள் இயக்குனருக்கு நன்றி.

இசைஞானி ஐயா இளையராஜா அவர்களின் மனதை வருடும் இசை மற்றும் ஆழமான கதைக்கு உயிரூட்டிய பிண்ணணி இசைக்கு நன்றி.

எங்கள் “வாத்தியார்” விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் தனது ஒப்பற்ற நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நிறைவான தடம்பதித்ததற்கு நன்றி.

எங்கள் ‘’குமரேசன்’’ சூரி கடைநிலை காவலர் கதாபாத்திரத்திற்குத் தன்னலமற்ற அர்ப்பணிப்பை அளித்து மிகுந்த உண்மைத்தன்மையுடன் தனது நடிப்பின மூலம் ரசிகர்களின் மனதை தொட்டு மகத்தான பங்களிப்பை செய்ததற்காக நன்றி.

மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் இத்திரைப்படத்திற்கும் பின்னால் இருக்கும் அனைத்து அற்புதமான குழுவிற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

விடுதலை பாகம் 2யை வெற்றிகரமான படைப்பாக்கிய அனைவரது உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் நன்றி.

தமிழ்நாட்டில் விடுதலை பாகம் 1 & 2யை சரியான தேதியில் வெற்றிகரமாக வெளியிட்டு திட்டமிடப்பட்ட வெளியீட்டின் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் கொண்டு சேர்த்த
ரெட் ஜெயன்ட் மூவீஸ்க்கு நன்றி.

இப்படத்தை உலகமெங்கும் உள்ள அனைத்து ரசிகர்களுக்குக் கொண்டு சேர்த்த எங்கள் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நன்றி.

See Also

கலைஞர் தொலைக்காட்சி, zee5 மற்றும் சோனி Music நிறுவனங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

விடுதலையை முழு மனதுடன் அணுகி, சிறந்த திரைப்படத்திற்கான உங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளித்ததற்கும், இந்த சாதனையை அடையச் செய்ததற்கும் ரசிகர்களுக்கு நன்றி.

இந்த வெற்றியை மனதார கொண்டாடும் இந்நேரத்தில், ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் தனது இரு புதிய திரைப்படங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

இயக்குனர் வெற்றிமாறனின் 7வது படமான விடுதலை பகுதி 2 வெற்றிக்குப் பிறகு, அவரது இயக்கதில் 9வது படத்தில் நடிப்பு அசுரன் திரு.தனுஷ் அவர்களுடன் இணைவதில் ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சியடைகிறது. தொடர் வெற்றிப் படங்களை வழங்கிய இந்த கூட்டணி மீண்டும் இணைந்து, புதிய சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கிறது. மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

விடுதலையின் வெற்றிக்குப் பிறகு, ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் திரு.சூரி அவர்களுடன் மீண்டும் இணைகிறது. விடுதலை தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்த இயக்குனர் வெற்றிமாறன் குழுவின் முக்கிய உறுப்பினரான மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளிக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம் மக்களுக்கான மண்சார்ந்த படைப்பைகளை வழங்குவதில்
RS இன்ஃபொடெயின்மென்ட் பெருமைகொள்கிறது
நன்றி.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)