Now Reading
கிளாமர் லுக் இல் ட்ரெண்டாகும் ராஷ்மிகா மந்தனா… ஃபோட்டோஸ்…ரொம்ப தூக்கலா தாங்க இருக்கு …

கிளாமர் லுக் இல் ட்ரெண்டாகும் ராஷ்மிகா மந்தனா… ஃபோட்டோஸ்…ரொம்ப தூக்கலா தாங்க இருக்கு …

நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹிந்தியில் இன்னொரு ஹிட்டை பார்சல் செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தச் சூழலில் அவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். தொடர்ந்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருந்ததால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என எதிர்பார்த்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. நேஷனல் க்ரஷ்: தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார்.ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு அனிமல் படத்தில் பாராட்டையும் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ஹிட்டால் அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவருக்கு வேறு சில வாய்ப்புகளும் ஹிந்தியில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் ராஷ்மிகாதான் ஹீரோயின். அதனை சில மாதங்களுக்கு முன்பு அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குபேரா: இதற்கிடையே தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா. தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் ராஷ்மிகா; குபேரா படத்தின் மூலம் அந்த இடத்தை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். மேலும் புஷ்பா 2 படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.இப்படி படங்களில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா ஃபோட்டோஷூட்டிலும் பிஸியாக இருக்கிறார். அவர் எடுத்துக்கொள்ளும் ஃபோட்டோஷூட்டில் கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். அந்தவகையில் இப்போதும் அவர் ஒரு ஃபோட்டோஷூட் நடத்தியிருக்கிறார். அதில் கோட் ஒன்றை அணிந்தபடி படு கிளாமராக இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனா ஒரு முடிவோடுதான் இருக்கிறார் போல என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)