ஓட்டு போடா வராதது ஏன் ஜோதிகாவிடம் கேள்வி….ஜெர்க்கான ஜோதிகா
நடிகை ஜோதிகா ஸ்ரீகாந்த் என்னும் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்த நிலையில் அவரிடம் செய்தியாளர்கள் ஓட்டு போட ஏன் வரவில்லை என்கிற கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் வீடு வாங்கி அங்கே குடியேறினார்கள். அவர்களின் குழந்தைகளின் படிப்புக்காக மும்பைக்கு சென்றதாகவும் ஜோதிகாவின் பெற்றோர்களை கவனித்துக் கொள்வதற்காக அங்கு சென்றதாகவும் ஜோதிகா தெரிவித்திருந்தார்.
மும்பைக்கு சென்ற ஜோதிகா தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். அஜய் தேவ்கன், மாதவன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஷைத்தான் திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மும்பையிலிருந்து தற்போது தனது புதிய படமான ஸ்ரீகாந்த் படத்துக்கு புரமோஷன் செய்யும் வகையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளிப்பது, பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என சுழன்று வருகிறார். பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜோதிகாவிடம் அவரது ஃபிட்னஸ், அரசியல் ஆர்வம், தமிழ் படங்களில் நடிப்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டன. ஓட்டுப்போட வராதது ஏன்?: நடிகர் சூர்யா, சிவக்குமார் மற்றும் கார்த்தி உள்ளிட்ட மூவரும் ஒன்றாக வந்து நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கு வாக்கு செலுத்திய நிலையில், நடிகை ஜோதிகா வராதது குறித்த கேள்வி தற்போது அவர் முன் எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதில் அளித்த ஜோதிகா ”ஒவ்வொரு வருஷமும் ஓட்டுப் போடுறேன் இந்த தடவை மிஸ் ஆகிடுச்சு” என்றார். உடனடியாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் ஓட்டு போட முடியும் என பத்திரிக்கையாளர்கள் சொன்ன நிலையில், சற்று ஜெர்க்கான ஜோதிகா, “ஸாரி.. ஊரில் இல்லை, பர்ஷனல் விஷயம் காரணமாக ஓட்டுப் போட வரமுடியவில்லை” என பதில் அளித்துள்ளார். சினிமா பிரபலங்கள் முதல் பொது மக்கள் வரை வெளிநாட்டில் இருந்தாலும் ஜனநாயக கடமையை ஆற்ற வரும் நிலையில், ஜோதிகாவின் இந்த பதில் அலட்சியமான பதிலாக உள்ளதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். செல்ஃபிஷ்ஷா இருக்கணும்: பெண்கள் திருமணத்துக்கு பிறகு ஃபிட்டாக இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என்கிற கேள்விக்கு குடும்ப பொறுப்புகள் இருந்தாலும் கொஞ்சம் செல்ஃபிஷ்ஷாக இருந்து தங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வொர்க்கவுட் செய்ய வேண்டும். அப்போது தான் பல விஷயங்களை சாதிக்க முடியும். நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும் எனக் கூறியுள்ளார்.