பிச்சைக்காரன் 2 விமர்சனம்
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி, இயக்குனர் சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். 2016ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில் பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டார். அதற்காக சில இயக்குனர்களிடமும் பேசினார். ஆனால் இறுதியில் நடிகர் விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது குறித்து பலர் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் பிச்சைக்காரன். தாயை காப்பாற்ற பணக்கார மகன் பிச்சைக்காரனாக மாறிய கதையை படமாக்கி ரசிகர்களை கவர்ந்தார் சசி. விஜய் ஆண்டனி இந்த கதைக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார். செண்டிமெண்ட், காமெடி, காதல், மாஸ் காட்சிகள் என அனைத்தும் அடங்கிய பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக இந்த படம் அமைந்து இருந்தது.பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், தற்போது அதன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை சசிக்கு பதிலாக விஜய் ஆண்டனியே இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள இப்படத்தில் காவ்யா தப்பார் ஹீரோயினாக நடித்துள்ளார்.பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது.
இது பிச்சைக்காரன் படத்தின் தொடர்ச்சி இல்லை. இது வேறுபடம். டைட்டில் பொருத்தமாக உள்ளது. படத்தில் நடித்துள்ள குழந்தைகள் சிறப்பாக நடித்துள்ளார்கள். வி.எஃப்.எக்ஸ் மோசம், தயாரிப்பு சரியில்லை. திரைக்கதை டல் அடிக்கிறது. எமோஷனலாக கனெக்ட் ஆகவில்லை. ஆண்டி பிகிலி ஐடியா சூப்பர். ஆனால் அதை காட்சிப்படுத்திய விதம் சரியில்லை. மொத்த படத்திலும் பாதி கூட விறுவிறுப்பான காட்சிகள் இல்லை.
பிச்சைக்காரன் 2 டீசண்ட்டான படமாக உள்ளது. இது முழுக்க முழுக்க விஜய் ஆண்டனியின் ஷோ. கதைக்களம் புதிதாக இல்லாமல் வழக்கமான படமாகவே உள்ளது. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். இருந்தாலும் பார்க்கக்கூடிய படமாகவே உள்ளது. பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஜெண்டில்மேன் படம் போல சமூக கருத்துள்ள படமாக இருந்தாலும், பிச்சைக்காரன் படம் போல் எமோஷனலாக இல்லை.