அரண்மனை 4 வசூல் கனவா போச்சே எதனால் ??
கடந்த ஆண்டு கோலிவுட் சினிமாவில் ஜனவரி மாதமே விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு என இரு படங்கள் வெளியாகின. வாரிசு திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலும் துணிவு திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டி ஒட்டுமொத்தமாக 500 கோடி ரூபாய் வசூலை ஜனவரி மாதமே பெற்றுத்தந்தது.அதன் பின்னர் வெளியான பத்துக்கும் மேற்பட்ட குறைந்த பட்ஜெட் படங்கள் 50 கோடி வசூலை அசால்டாக தாண்டின. மேலும், பல நல்ல திரைப்படங்கள் வெளியாகி கோலிவுட் ரசிகர்களை தலைநிமிர செய்தது.
கடைசியாக ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான லியோ என இரண்டு படங்களுமே மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி ஆளுக்கு 600 கோடி என தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை கடந்த ஆண்டு உச்சத்துக்கு கொண்டு சென்றனர். ஜனவரி மாதமும் அதே மேஜிக் நிகழும் என எதிர்பார்த்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான நிலையில், ஆரம்பமே பாக்ஸ் ஆபிஸில் இரண்டு படங்களும் சொதப்பிய நிலையில், அதன் பின்னர் வெளியான அனைத்து படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்திக்கத் தொடங்கின. இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படம் என சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் கொண்டாடப்பட்ட நிலையிலும் அந்தப் படத்தின் வசூல் இதுவரை 73 கோடி மட்டுமே எடுத்து இருப்பதாகவும் 75 கோடி வசூலை எடுக்கவே அந்தப் படம் திணறி வருவதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் வசூலாவது எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் வசூல் 15 கோடி ரூபாயுடன் சுருண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான பிரேமலு, பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு சேஷம் மற்றும் ஆவேஷம் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து அதிக வசூல் ஈட்டிய நிலையில், சுமார் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் லாபத்தை மலையாளத் திரையுலகம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். 100 கோடி கூட வராதது ஏன்?: அரண்மனை 4 திரைப்படத்திலும் பெரிதாக புதிய கதை ஏதும் இல்லை. கொஞ்சம் ரசிகர்களை பாக் பேய் என்டர்டெயின் செய்த நிலையில், இந்தளவுக்கு வசூல் பெற்றுள்ளது. கவினின் ஸ்டார் படமும் கவிழ்த்து விட்ட நிலையில், மலையாளத்தில் பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ் செய்த மேஜிக்கை கூட தமிழ்நாட்டில் எந்த படங்களும் செய்யவில்லை. அதனால், தான் இன்னமும் இந்த ஆண்டு 5 மாதங்களாகியும் ஒரு 100 கோடி படம் போடு தமிழில் வெளியாகவில்லை என்கின்றனர். பல திரையரங்குகளை மூடும் முடிவுக்கே தியேட்டர் ஓனர்கள் வந்திருப்பதாக கூறுகின்றனர்.
ஜூன் மாதம் இந்தியன் 2 வருமா? என்கிற கேள்வியே எழுந்துள்ளது. மே மாதம் பாதி முடிந்த நிலையில், இன்னமும் இந்தியன் 2 டீசர் மற்றும் ரிலீஸ் தேதி என எதையும் லைகா வெளியிடவில்லை. அமரன், தங்கலான், கங்குவா படங்களின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகவில்லை. விஜய்யின் கோட் மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் படங்கள் தான் இந்த ஆண்டு தமிழ் சினிமாவை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல பெரிய படங்கள் ரிலீஸ் செய்தால் பெரிய வசூல் வரவில்லை என்றால் என்ன செய்வது என்கிற அச்சத்திலேயே படங்களை வெளியிடாமல் உள்ளதாக கூறுகின்றனர்.