அரண்மனை 4 வெற்றியில் சுந்தர் .சி குடும்பம் …வசூல் சாதனை எதிர்பார்ப்பு …
அரண்மனை 3 படம் அவுட்டானாலும் அசால்ட்டாக இந்த சீரிஸை வெற்றி சீரிஸாக மாற்றி காட்டுகிறேன் என சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே பட்டையை கிளப்பி இருக்கிறது.
சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் அதிக அளவிலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் வெற்றிப் படமாக மாறும் என தெரிகிறது.
இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக சொதப்பி வந்த நிலையில், கடந்த வாரம் வெளியான ரத்னம் படமும் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வெற்றி பெறவில்லை. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் கில்லி திரைப்படம் மட்டும் 25 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
அரண்மனை 4 படத்தை விமர்சகர்கள் சில குறைகளை சொல்லி கிரிஞ்ச் என கழுவி ஊற்றினாலும் பெருவாரியான மக்கள் இதுவரை இந்த ஆண்டு பார்த்த படங்களுக்கு இது பரவாயில்லை என்றே பாசிட்டிவ் விமர்சனங்களை சொல்லிய நிலையில், படம் 2வது ஷோவே பிக்கப் ஆக ஆரம்பித்து விட்டது. ஈவ்னிங் மற்றும் நைட் ஷோக்கள் 80 சதவீத இருக்கைகள் நிரம்பின.
அரண்மனை 4 படத்தை விமர்சகர்கள் சில குறைகளை சொல்லி கிரிஞ்ச் என கழுவி ஊற்றினாலும் பெருவாரியான மக்கள் இதுவரை இந்த ஆண்டு பார்த்த படங்களுக்கு இது பரவாயில்லை என்றே பாசிட்டிவ் விமர்சனங்களை சொல்லிய நிலையில், படம் 2வது ஷோவே பிக்கப் ஆக ஆரம்பித்து விட்டது. ஈவ்னிங் மற்றும் நைட் ஷோக்கள் 80 சதவீத இருக்கைகள் நிரம்பின.
அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளில் 3.60 கோடி முதல் 4 கோடி வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கில்லி ரீ ரிலீஸ் திரைப்படம் 4 கோடி ரூபாயை முதல் நாளில் அள்ளிய நிலையில், அதே போல சுந்தர் சி படம் தற்போது 4 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் தொட்டுள்ளது. சனிக்கிழமை 6 கோடி ரூபாயும் ஞாயிற்றுக் கிழமை 8 முதல் 10 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் சி மற்றும் குஷ்புவின் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்தது. அரண்மனை 4 படம் வெற்றி பாதையில் செல்வதால் சுந்தர் சி குடும்பமே சந்தோஷத்தில் இருக்கிறது. பல்வேறு தியேட்டர்களுக்கும் சுந்தர் சி விசிட் அடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரம் வெளியாகும் ஸ்டார் திரைப்படமும் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.