விரக்தியில் பேசிய ஓட்டேரி நரி’ தாமு…
விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் சுமார் 20 ஆண்டுகள் கழித்து 2024 ஆம் ஆண்டு கடந்த வாரம் சனிக்கிழமை திரையரங்குகளில் 4k தொழில்நுட்பத்துடன் மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய படங்களுக்கு தியேட்டரில் ஆட்கள் வரவில்லை என புலம்பிக் கொண்டிருந்த தியேட்டர் ஓனர்கள் பழைய படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து தியேட்டர் பிசினஸை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
ரஜினிகாந்தின் அண்ணாமலை, காதலர் தினத்தை முன்னிட்டு பல காதல் படங்கள், சிவா மனசுல சக்தி, அஜித்தின் வாலி, தனுஷின் யாரடி நீ மோகினி, கார்த்தி தமன்னா நடித்த பையா போன்ற பல படங்கள் மீண்டும் வெளியாகி ரசிகர்களை தியேட்டர் பக்கம் வர வைத்தன. 9 நாட்களும் கொண்டாட்டம்: மற்ற ரிலீஸ் படங்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் கூடி கொண்டாடி வந்த நிலையில், தளபதி விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஓவர்சீஸ் என அனைத்து இடங்களிலும் கடந்த 9 நாட்களும் மிகப்பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் திரையரங்குகளில் நடைபெற்று வருகின்றன.
ரீ ரிலீஸ் கொண்டாட்டம் என்றால் என்னென்ன கில்லி படம் மீண்டும் வெளியானால் பார்ப்பீங்க என சவால் விட்டதைப் போலவே தளபதி ரசிகர்கள் கில்லி படத்தை திரையரங்குகளில் புதிய படம் போலவே பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
கில்லி படம் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியானது. அந்தப் படத்தில் ஓட்டேரி நரி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். 20 வருடத்திற்குப் பின்பு அந்த படம் வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மொத்தமாக 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். 20 வருஷத்துக்கு முன்னாடி வந்த கில்லி படத்தை விசில் அடித்து கொண்டாடுகிறீர்கள். ஆனால் 20 வருஷத்துக்கு முன்னாடி நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது பல இடங்களில் இந்த வெயிலுக்கு நிழல் தருகிறது. அந்த மரக்கன்றுகளை நட்டவர்களுக்கு எப்போதாவது விசில் அடித்துக் கொண்டாடி இருக்கிறீர்களா என நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தாமு விரக்தியுடன் பேசியது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.