2024ல் டாப் 10 படங்களின் கலெக்ஷன் ரிப்போர்ட்.. நம்பர் ஒன் இடத்தை தட்டிப்பிடித்தது மொட்டை தல ராயனா இல்ல இந்தியன் 2வா.?
இந்த வருட ஆரம்பத்திலேயே சபாஷ் சரியான போட்டி என கேப்டன் மில்லர், அயலான் ஆகிய படங்கள் மோதிக்கொண்டது. அதை அடுத்து ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியானது. அதில் எந்த படம் கலெக்ஷனை தட்டி தூக்கியது என இங்கு காண்போம்.
அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 33.65 கோடிகளை மட்டுமே வசூலித்து 10ஆம் இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக விஜயின் கில்லி ரீ ரிலீஸ் ஆகி 34 கோடிகளை வசூலித்து 9வது இடத்தை பிடித்திருக்கிறது.
அடுத்ததாக சூரி நடிப்பில் வெளியான கருடன் 59.55 கோடிகளை வசூலித்து 8ம் இடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி நான்கு நாளில் தங்கலான் 65 கோடிகளை வசூலித்து 7ம் இடத்தில் உள்ளது.
மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் 72. 35 கோடிகளை வசூலித்து 6ம் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் 82 கோடிகளை வசூலித்து 5ம் இடத்தில் உள்ளது.
அதைத்தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 102.15 கோடிகளை வசூலித்து நான்காம் இடத்தில் உள்ளது. அடுத்து விஜய் சேதுபதியின் மகாராஜா 107.90 கோடிகளை வசூலித்து 3ம் இடத்தில் இருக்கிறது.
மேலும் ஷங்கர், கமல் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன்2 155 கோடிகளை வசூலித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் சோசியல் மீடியா ட்ரோல் மெட்டீரியலாக மாறி மொக்கை வாங்கியது.
அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்த அவருடைய ஐம்பதாவது படமான ராயன் இதுவரை 156 கோடிகளை வசூலித்திருக்கிறது. இந்த வரிசையில் இப்படம் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருக்கிறது. இப்படியாக ஆகஸ்ட் மாதம் வரை கோலிவுட் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது.
இதை அடுத்து செப்டம்பர் மாதம் விஜய்யின் கோட் வெளிவர இருக்கிறது. அடுத்ததாக அக்டோபர் 10ஆம் தேதி கங்குவா, வேட்டையன் ஆகிய படங்கள் மோதுகிறது. அதைத் தொடர்ந்து தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன் அடுத்ததாக விடாமுயற்சி என அடுத்தடுத்து படங்கள் வெளிவர உள்ளது.