நித்தம் ஒரு வானம்.விமர்சனம் இதோ.

எதிலும் 100% பெர்ஃபக்ட், சுத்தம் சுகாதாரம் என OCD பிரச்சனையுடன் வாழும் அசோக் செல்வனுக்கு  திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்கு முதல் நாள் இரவு முன்னாள் காதலன் பற்றி பேசும் மணப்பெண்ணிடம் பிராக்டிகல் ஆக சொல்வதாக கூறி பேசும் அவருடைய பேச்சுக்கள் திருமணம் நின்று போக காரணமாகிறது. இதனால் கடும் மன அழுத்ததுக்கு ஆளாகும் அர்ஜூனிடம் டாக்டராக வரும் அபிராமி இரு காதல் கதைகள் அடங்கிய டைரிகளை கொடுத்து படிக்க சொல்கிறார். அந்த இரண்டிலும் கடைசி சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு கதையிலும் உள்ள கேரக்டர்களுக்கு கடைசியில் என்ன நேர்ந்தது? அசோக் செல்வன் தன் பிரச்சனையில் இருந்து மீண்டாரா? என்ற கேள்விகளுக்கு நித்தம் ஒரு வானம் பதிலளிக்கிறது.

படத்தில் பல கேரக்டர்கள் வந்தாலும் வீரா கதையில் மீனாட்சியாக வரும் சிவாத்மிகாவை விட, பிரபா கதையில் மதியாக வரும் அபர்ணா பாலமுரளியின் கேரக்டர் அதிகமாக நம்மை கவர்கிறது. அப்பாவுடன் மல்லுகட்டும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது. சில காட்சிகளே வந்தாலும் ஷிவதாவின் நடிப்பும் அவர் கேரக்டரும் நம் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைகிறது. அதேசமயம் இடைவேளைக்குப் பிறகு அந்த டைரி கதைகளின் ட்விஸ்ட்கள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இன்னொரு ஹீரோயினாக வரும் ரித்துவர்மாவும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

3 விதமான கதைகள், கதைக்களங்கள் என ஒவ்வொன்றிற்கும் நம்மை கைபிடித்து அழைத்து செல்லும்  விது ஐயனாவின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது. குறிப்பாக பனிமலைகளுக்கு நடுவே எடுக்கப்பட்ட காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. கொஞ்சம் தப்பினால் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் பல கேரக்டர்களை சரியாக கதையில் கையாண்டதில் இயக்குநர் ரா. கார்த்திக் கவனம் பெறுகிறார். வாழ்க்கையின் மிக கடினமான சூழ்நிலையில் அந்த அழுத்தத்தில் இருந்து விடுபட நாம் செய்யும் வேலைகள், பயணங்கள் நிச்சயம் அந்த வாழ்வின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். அதேபோல் நாம் பார்க்கும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழும் மனிதர்களை பார்க்கும் போது நமக்கு இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்ற வைக்கும் நிதர்சனத்தை உணர்த்தியிருக்கிறது நித்தம் ஒரு வானம் படம்.

Pros

Story

Acting

Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)