நினைவெல்லாம் நீயடா விமர்சனம்
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக் கதை, வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் – யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
வழக்கம் போல் தமிழ் சினிமாவில் சொல்லப்படும் பள்ளி பருவ காதலை மையப்படுத்தி இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் இறுதியில் இயக்குனர் வைத்த ட்விஸ்ட் தான் அனைவரையும் மெய்சிலிர்க்க செய்துள்ளது.
பள்ளியில் படிக்கும் கவுதம் மற்றும் மலர் விழி காதலித்து வருகிறார். கவுதம் ஒரு இசை கருவியை வாங்கி கொடுக்க அதுவே அவர்களின் காதலின் நினைவு சின்னமாக இருக்கிறது. படிப்பை முடித்த காதலி ஒரு கட்டத்திற்கு மேல் வெளிநாடு செல்ல, காதலி வருவால் என கவுதமும் (பிரஜன்) இங்கே காத்து கொண்டிருக்கிறார்.
நினைத்ததை போலவே மலர்விழி (சினாமிகா) திருமணம் செய்து கொள்ளாமல் கவுதம் மீதுள்ள ஆசையோடே திரும்பி வருகிறார். வந்து பார்த்தாலோ கவுதமிற்கு திருமணம் நடந்துள்ளது. இவர் இந்த திருமணத்தை எப்படி எடுத்து கொள்வார், அடுத்து என்ன நடக்கும் என்பதே முழு கதையாக இருக்கிறது. இவர் தான் மலர் விழி என நினைத்து கொண்டிருக்கும் ரசிகர்களின் கண்ணுக்கு இறுதியில் பெரும் ட்விஸ்டாக ஒரு கதாநாயகி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா ஆகியோரும் காமெடியில் கலக்க, மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தும் விதமாக இசைஞானி இளையராஜாவின் இசை அமைந்துள்ளது. இந்த படத்தில் உள்ள பாடல்களும் படத்திற்கு சப்போர்ட்டாக அமைந்துள்ளது. மொத்தத்தில் முதல் காதல் எப்போதும் அழிவதில்லை என்றே இந்த படம் உணர்த்துகிறது. அனைவருக்கும் பள்ளியிலோ, கல்லூரியிலோ, அக்கம் பக்கத்திலோ என காதல் வந்திருக்கும். எத்தனை காதல் வந்தாலும் முதல் காதல் மனதில் என்றும் நீங்காது. அது இனம் புரியாத ஒரு விதமான உணர்ச்சியை கொடுக்கும் என்பதை இந்த படத்தில் இயக்குனர் தெரியபடுத்தியுள்ளார்.