பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளராக மைனா நந்தினி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

 

 

பிக்பாஸ் சீசன் 6 தமிழ், வரும் அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்  என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல நடிகை மைனா நந்தினி கலந்து கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மைனா நந்தினி சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்திருந்தார்.வெண்ணிலா கபடிக் குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விருமன் உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை & குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நந்தினி. இதை தொடர்ந்து இவர் சீரியல்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சரவணன் மீனாட்சி, பிரியமானவளே, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நந்தினி நடித்துள்ளார்.

 

See Also

 

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சியில் கலகலப்பான மைனா என்ற கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்து பிரபலமானவர் நந்தினி. அந்த சீரியலுக்குப் பிறகு அவரை மைனா நந்தினி என்றே பலரும் அழைத்து வருகின்றன

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)