ஓடிடியில் மஞ்சும்மல் பாய்ஸ்…மொத்த வசூல்
மலையாளத்தில் பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மஞ்சும்மல் பாய்ஸ் படம் வாய்மொழி விளம்பரம் மூலம் பெரும் விளம்பரத்தை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த மஞ்சம்மல் என்ற ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் 11 பேர் கொண்ட நண்பர்கள், சுற்றுலா செல்கின்றனர். கோவாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு பின் அது தோல்வியில் முடிய, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, குணா குகையை பார்க்க வருகின்றனர்.
அந்த குகையின் அழகைப்பார்த்து வியந்து போன நண்பர்கள் புகைப்படம் எடுப்பதற்காக தடையை மீறி செல்கின்றனர். அப்போது, ஒரு பள்ளத்தில் நண்பன் சுபாஷ் விழுந்துவிட அங்கிருந்த அனைவரும் பதறிப்போய் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது, குழியில் விழுந்த நண்பன் சுபாஷை மீட்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
1991ம் ஆண்டுக்கு முன்பு வரை டெவில்ஸ் கிச்சன் என்று அழைக்கப்பட்ட குகை, நடிகர் கமல்ஹாசனின் குணா படம் அதில் படமாக்கப்பட்டதற்கு பிறகு, குணா குகை என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 2006ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காதல் சீன் இல்லை, ரொமான்ஸ் இல்ல, சண்டை சீன் இல்லை, குறிப்பாக படத்திற்கு ஹீரோவே இல்லை. படத்தில் நடித்த 11 நண்பர்களும் ஹீரோதான்.
அது மட்டுமில்லாமல் படம் தொடங்கும் போது கண்மணி அன்போடு காதலன் பாடல் ஒலிக்கும் போது டைட்டில் கார்டோடு படம் தொடங்குகிறது. அதே போல, கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் மெய்சிலிர்க்கும் வகையில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்று பாட்டை கேட்டு ஒட்டுமொத்த தியேட்டரும் விசில் அடித்து ரசித்தனர். இத்தனை ஆண்டுகளாக காதலன் காதலிக்காக பாடிய பாடலாக பார்க்கப்பட்டு வந்த இந்த பாடல், மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு நண்பர்களுக்கான பாடலாக மாறி உள்ளது.
தற்போது இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேற்று வெளியானது. இப்படத்திற்கு ஓடிடியிலும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெறும் 72 நாட்களில் உலகம் முழுவதும் 240 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் ஒரிஜினல் தமிழ்த் திரைப்படங்களை கூட இந்த படம் மிஞ்சிவிட்டது.