LEO விமர்சனம்
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ படம் உலகம் முழுதும் இன்று வெளியாகி இருக்கிறது. கைதி,மாஸ்டர்,விக்ரம் என்று தொடர்ச்சியாக மூன்று பிளாக்பாஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் பிளாக்பாஸ்டர் மீண்டும் விஜயை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி இருக்கிறார். விஜய்,திரிஷா,அர்ஜுன், சஞ்சய் தத்,கெளதம் மேனன்,பிரியா ஆனந்த்,மிஸ்கின் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.
லோகேஷ் கனகராஜ் சொன்னது போல லியோ படத்தின் கதை ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாக உருவாகி இருக்கிறது. பார்த்திபன் தனது மனைவி இருக்கிறது. மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஹிமாச்சல பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கே ஒரு சிறிய காபி கடை வைத்து நடத்தி வரும் அவர் அதன் மூலம் வரும் வருமானத்தில் தனது வாழ்க்கையை தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இருப்பினும், அவரது மகிழ்ச்சி நீண்ட காலம்நீடிக்கவில்லை. எதிர்பாராத விதமாக பார்த்திபனுக்கு சிலருடன் சண்டை ஏற்படுகிறது . இதனால் பார்த்திபன் இமாச்சல பிரதேசம் முழுவதும்பிரபலமாகிறார். அதன் பிறகு ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்ட் தாஸ் பார்த்திபனை கவனிக்கிறார்கள். பார்த்திபனின் செயல்கள் பழைய எதிரியான லியோ தாஸை நினைவுபடுத்துகின்றன.
இப்படிப்பட்ட நிலையில் பார்த்திபன் யார், லியோ தாஸுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறது. பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தை ஆண்டனி ஏன் தேடி அவரது பார்த்திபன் இந்த அனைத்து சிரமங்களையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறுகிறாரா ? அல்லது அவரது மகிழ்ச்சியான குடும்பம் ஒரு நொடியில் பிரிந்துவிடுகிறதா? இந்த முழுமையற்ற கேள்விகளுக்கான பதில்களுடன்படம் நகர்கிறது.
படத்தின் சண்டை காட்சிகள், விஷ்வல்ஸ், இசை மற்றும் பின்னணி ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. படத்தின் VFX லோகேஷ் சொன்னது போல தரமாக அமைந்து இருக்கிறது.குறிப்பாக முதல் போல நிமிடம் தீயாக இருந்தது வாரிசு,பீஸ்ட் படங்களில் மிஸ் செய்த விஜய்யின் என்ட்ரி பாடல் கொண்டாட்டம் இரண்டாம் பாதியில் வரும் நான் ரெடி பாடலால் இந்த படத்தில் மிஸ் ஆகவில்லை படத்தில் நீங்கள் எதிர்பாராத மிகப்பெரிய தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் cameo இருக்கிறது.
படத்தின் செண்டிமெண்ட் காட்சிகள் அந்த அளவிற்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை. படத்தில் அத்தனை வில்லன்கள் இருந்தாலும் யாருடைய கதாபாத்திரமும் வெய்ட்டாக இல்லை. படத்தின் இரண்டாம் பாதி படு மெதுவாக நகர்கிறது. படத்தின் நீளம் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் தான், அதிலும் இரண்டாம் பாதி உங்கள் பொறுமையை சோதிக்கும்.
லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான விக்ரம் கைதி போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து LCU என்ற பெயர் உருவானது. எனவே இந்த படம் LCU உருவானது. இல்லையா என்ற மிகப்பெரிய கேள்வி உருவானது. இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.