கவுண்டமணி பிறந்தநாள்..ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்தவர் …எத்துணை அவதாரம்
கவுண்டமணி தனியாகவும் நடிகர் செந்திலுடன் இணைந்தும் காமெடியில் அதகளம் செய்தவர். தொடர்ந்து 50 ஆண்டுகளாக இவர் சினிமாவில் நடித்து வருகிறார். இடையில் சில காலங்கள் நடிப்பில் இருந்து விலகியிருந்த கவுண்டமணி தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். ஒத்த நோட்டு முத்தையா என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இன்றைய தினம் கவுண்டமணி தன்னுடைய 85வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூழலில் அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழில் தன்னுடைய டைமிங் காமெடி மற்றும் நக்கல் பேச்சுக்களால் அனைவரையும் திரையில் மட்டுமில்லாமல் பொதுவெளிகளிலும் குஷிப்படுத்தியவர் கவுண்டமணி. தன்னுடைய மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்தும் இயல்புடைய கவுண்டமணி 320க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய டைமிங் மற்றும் நக்கலான காமெடி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலம் கோலோச்சியவர் நடிகர் கவுண்டமணி. தனியாகவும் நடிகர் செந்திலுடன் இணைந்தும் இவர் செய்த காமெடியை தமிழ் சினிமா இருக்கும் வரையில் மறக்க முடியாது. இன்றைய தினம் தன்னுடைய 85வது பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் கவுண்டமணி, கோவையை சேர்ந்தவர். சினிமா மீது இருந்த ஆசையில் முதலில் நாடகத்தில் சேர்ந்து நடிக்க தொடங்கி, பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். கரகாட்டக்காரன் பட காமெடி: பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலம் நகைச்சுவை நடிகராக இவர் அறிமுகமானார். எண்பதுகளில் கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து நடிக்காத படங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு இவர்களது காம்பினேஷன் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கரகாட்டக்காரன் படத்தில் இவர்களது வாழைப்பழ காமெடியை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து விட முடியாது. தொடர்ந்து நாட்டாமை, வைதேகி காத்திருந்தாள், சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் கவுண்டமணி -செந்தில் கூட்டணி காமெடி கலாட்டா செய்ததையும் ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டார்கள்.
அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு செந்தில் செய்யும் அட்ராசிட்டிகளில் சிக்கிக்கொள்ளும் விதத்தில் கவுண்டமணி அதனால் பிரச்சினைக்குள்ளாவதாக தொடர்ந்து இவர்களது காமெடி காணப்பட்டது. இவர்களது கூட்டணி தொடர்ந்து 90களிலும் பிரபலமாக காணப்பட்டது. 2000ங்களில் இவர்களது படங்கள் குறைந்தது. தமிழில் தொடர்ந்து ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக், மறைந்த நடிகர் விஜயகாந்த் என முன்னணி நாயகர்களுடன் கவுண்டமணி பல படங்களில் செந்திலுடன் இணைந்து நடித்துள்ளார். கவுண்ட்டர் கொடுப்பதில் மிகவும் திறமைசாலியான கவுண்டமணிக்கு அதுவே பின்னர் கவுண்ட்டர் மணி என மாறி கவுண்டமணி ஆனது. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் செல்வி மற்றும் சுமித்ரா என்ற மகள்களும் உள்ளனர்.
கவுண்டமணி இன்றைய தினம் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வரும் சூழலில், அவருக்கு 70 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சென்னை மற்றும் சொந்த ஊரிலும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய 320க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கவுண்டமணி, திரையுலகில் இருந்து சில காலங்கள் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஒத்த நோட்டு முத்தையா என்ற படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது காமெடியால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள கவுண்டமணி, காமெடியில் மட்டுமில்லாமல் ஹீரோ வில்லன் குணசித்திர வேடங்களிலும் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்தவர்.