Now Reading
Kantara Movie Review

Kantara Movie Review

`கே.ஜி.எஃப் 2′ என்ற மெகா பட்ஜெட் வெற்றிக்குப் பிறகு, மற்றுமொரு கன்னடப்படம் தேசியளவில் கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த முறை பிரமாண்ட பட்ஜெட் இல்லை, காட்சிக்குக் காட்சி ஹீரோயிஸம் இல்லை. ஆனால், அந்த மிரட்டலுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் `Kantara’  மூலம் மிரள வைத்திருக்கிறது கன்னட சினிமா. நிலத்திற்காக, அரசாங்கத்தாலும் ஆதிக்க சக்திகளாலும் பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைதான் படத்தின் ஒன்லைன்.

ரிஷப் செட்டி இயக்கி, நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து சப்தமி கௌடா, கிஷோர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கே ஜி எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பெல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த வாரம் வெளிவந்த இந்த திரைப்படம் பல பாசிட்டிவ் விமர்சனங்களால் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கதைப்படி அளவுக்கு அதிகமான சொத்துடன் இருக்கும் பண்ணையார் ஒருவர் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார். அப்போது மலை கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு அம்மக்கள் ஒரு கடவுளை வழிபடுவதை பார்க்கிறார். அந்தக் கடவுள் மூலம் தனக்கு நல்லது நடக்கும் என்று நம்பும் பண்ணையார் மக்களிடம் சில நிலங்களை கொடுத்து அந்த கடவுளை பெற்றுக்கொள்கிறார்.

அதன் பிறகு அவருடைய சந்ததிகள் இந்த நில விஷயத்தை கேள்விப்பட்டு மலை கிராம மக்களிடம் அதை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அந்த சூழ்நிலையில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஹீரோ வருகிறார். இந்த முயற்சியில் ஹீரோ வெற்றி பெற்றாரா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கதையை கேட்கும் போதே மிகவும் சாதாரணமாக தான் இருக்கிறது.

ஆனால் அந்த கதையை காட்சிப்படுத்தியிருந்த விதமும், பின்னணி இசையும், அதிரடி சண்டை காட்சிகளும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதிலும் ரிஷப் செட்டியின் நடிப்பு படு மிரட்டலாக இருக்கிறது. வெறித்தனமாக சண்டையிடுவதில் இருந்து செண்டிமெண்ட், ரொமான்ஸ் போன்ற அனைத்து காட்சிகளிலும் மனுஷன் வெறித்தனமாக நடித்திருக்கிறார்.

See Also

இதுதான் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மேலும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் வேட்டை தொழில் போன்றவை சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் கம்பளா என்ற எருமை மாட்டுப் போட்டி நடக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. இதில் முக்கியமானது படத்தில் எந்த தேவையில்லாத காட்சிகளும் கிடையாது.

ஒவ்வொரு காட்சிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போல் இருப்பது மிகப்பெரிய பலம். படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகள் ரசிகர்களை பரப்பரப்புடன் சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. ஆக மொத்தம் எதார்த்தமான கதையை இப்படி ஒரு கோணத்திலும் காட்சிப்படுத்த முடியும் என்பதை இந்த படம் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறது. அந்த வகையில் இந்த கந்தாரா ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளது.

Pros

Story

Acting

Cons

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)