Now Reading
ஜவான் விமர்சனம்

ஜவான் விமர்சனம்

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய  அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். குறிப்பாக நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து 3 படங்கள் இயக்கியதால் அதன் பலன் இந்தி சினிமாவுக்குள் அவர் அடியெடுத்து வைக்க காரணமாக அமைந்தது.இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள அட்லீ முதல் படமாக ‘பாலிவுட் பாட்ஷா’ என கொண்டாடப்படும் நடிகர் ஷாரூக்கானை வைத்து ’ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார்.

ரெட் சில்லி நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் இந்த படத்தை தயாரிக்கிறார்.  ஜவான் படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர்.  மேலும் தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு என உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.  இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் ஜவான் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது.

தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கே முதல் காட்சி தொடங்கிய நிலையில், முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படம் குறித்த விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.அட்லீ தொடங்கி அனிருத், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகிபாபு என மிகப்பெரிய கோலிவுட் படையையே இப்படத்தில் இறக்கிவிட்டு அழகுபார்த்துள்ளார் அட்லீ. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் நடிப்பில் மிரட்டியுள்ளதால் ரசிகர்கள் தெரிவித்துள்ளதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜவான் என்ன ஒரு அருமையான படம். ஷாருக்கான் ஒரு மாஸ்டர்பீஸ் படத்தை கொடுத்துள்ளார். கூஸ்பம்ப் காட்சிகள் நிறைந்த படமாக ஜவான் உள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பு ரொம்ப நல்லாயிருக்கு. அனிருத்தின் பின்னணி இசை திரையரங்குகளை அதிரவைக்கிறது. இயக்குனர் அட்லீக்கு தரமான கம்பேக் படம். சந்தேகமே வேண்டாம் ஷாருக்கான் தான் பாலிவுட்டின் கிங்.

ஜவான் முதல் பாதி சூப்பர். குறிப்பாக சண்டைக் காட்சிகள் அனல்பறக்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கூஸ்பம்ப்ஸ் தான். ஷாருக்கானின் பிளாஷ்பேக் வேறலெவல். நயன்தாரா எண்ட்ரி, விஜய் சேதியின் நடிப்பு பங்கமாக உள்ளது. விஜய் கேமியோ இல்லை. அதே போல் எந்தபடத்தில் சாயலும் இல்லை இது தான் ஜவான் படத்தின் பிளஸ்.

ஜவான் பிளாக்பஸ்டர். ஸ்டார் பவர், ஸ்டைல், பாடல்கள், பிரம்மாண்டம், சர்ப்ரைஸ் கேமியோ என அனைத்தும் கலந்த மாஸ் படமாக ஜவான் உள்ளது. 2023-ம் ஆண்டில் ஷாருக்கானுக்கு இரண்டாவது பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக ஜவான் அமைந்துள்ளது.

See Also

புது கதைக்களம் இல்லை என்றாலும் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் அருமையாக உள்ளது. ஷாருக்கானுக்கு 2வதுப் 1000 கோடி லோடிங். விஜய் சேதுபதி கேரியரில் இதுதான் அவருக்கு சிறந்த வில்லன் கதாபாத்திரம். நயன்தாரா திரையில் கூடுதல் அழகு சேர்த்திருக்கிறார். தீபிகா படுகோனேவின் சண்டைக் காட்சியில் மெர்சலாக்கி உள்ளார்.

இயக்குனர் அட்லீ, கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பாலிவுட்டில் இறக்கிவிட்டார் போல தெரிகிறது. இப்படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Pros
Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)