விஜய் தேவரகொண்டா இத்தனை கோடிக்கு அதிபதியா….
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1989 ஆம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் இவர். 2011-ம் ஆண்டு வெளியான நுவிலா படத்தின் மூலம் அறிமுகமானார். லைஃப் இஸ் பியூட்டிஃபுல், எவடே சுப்ரமணியம், பெலி சூப்புலு, துவாரகா என பல படங்களில் நடித்தாலும் அவருக்கு அடையாளமாக மாறியது அர்ஜுன் ரெட்டி படம் தான்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் ரெட்டி படத்துக்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மகாநதி மற்றும் கீதா கோவிந்தம் படங்கள் தான்.
அதன் பின்னர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான சுமார் அரை டஜன் படங்கள் பெரிதளவில் போகவில்லை. தமிழில் நோட்டா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் தேவரகொண்டா தொடர்ந்து தனது பாடங்களை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிட்டு வருகிறார். 35 வயசு: 24 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த விஜய் தேவரகொண்டா கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் அரை டஜன் படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தன. விஜய் தேவர்கொண்டாவின் அழகை ரசிக்கவே ஏகப்பட்ட பெண்கள் அவரது படங்களை பார்த்து வருகின்றனர். அதிகப்படியான பெண் ரசிகைகளை கொண்ட பேரழகனாக திகழும் விஜய் தேவரகொண்டா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்த ஆண்டு மிருணாள் தாகூருடன் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் தியேட்டரில் ரசிகர்களை கவரவில்லை. ஓடிடியில் வெளியான நிலையில், பலரும் அந்த படத்தின் வசனங்களுக்காகவும் கிளைமேக்ஸ் அந்த தீசிஸ் காட்சிக்காகவும் கழுவி ஊற்றினர். ஆனால், அதையெல்லாம் கண்டு அச்சப்படாமல் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் விஜய் தேவரகொண்டா. ஜெயித்தாலும் தோத்தாலும் மீசையை முறுக்கு என்கிற பாணியில் கலக்கி வருகிறார்.
விஜய் தேவரகொண்டா வுக்கு ஹைதராபாதில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு ஒன்று உள்ளது. மேலும், பல்வேறு நிலங்களில் அவர் முதலீடு செய்துள்ளார். ஒரு படத்துக்கு அதிகபட்சமாக 12 முதல் 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக அவரிடம் 40 முதல் 45 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா வெறித்தனமான கார் பிரியர். 68 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்சி, 90 லட்சம் மதிப்புள்ள வால்வோ எக்ஸி 90, 4.38 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர், 74 லட்சம் மதிப்புள்ள ஃபோர்ட் முஸ்டாங் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார். ரவுடி கிளாத்திங் என்கிற துணி நிறுவனத்தையும் நடத்தி சம்பாதித்து வருகிறார். இந்த பிறந்தநாளுக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியாக உள்ள படங்கள் வெற்றிப் படங்களாக அமைய வாழ்த்துகள்!