இணையத்தில் கசிந்த தகவல்…அர்ஜுன்தாஸ் கதையா?
மௌகுரு, மகாமுனி என இரண்டு படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார் இயக்குநர் சாந்தகுமார். தற்போது அவர் இயக்கத்தில். அர்ஜூன் தாஸ் நடித்துள்ள திரைப்படம் ரசவாதி. க்ரைம், ரொமான்டிக், த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் கதை குறித்த தகவல் இணைதயத்தில் கசிந்துள்ளது.
கைதி படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் தனது வித்தியாசமான குரலால் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ், இப்படத்தைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் போன்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். வில்லனாக நடித்து வந்த அர்ஜூன்தாஸ் கதாநாயகனாகவும் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இதையடுத்து, அர்ஜுன் தாஸ் அநீதி படத்தின் ஹீரோவாக அறிமுகமானார். அதிரடி ஆக்ஷன் க்ரைம் தில்லர் பாணியில் உருவான அந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் திருமேனி என்ற கதாபாத்திரத்திலும், துஷாரா விஜயன் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் அர்ஜூன் தாஸ், யாரைப் பார்த்தாலும் கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு மனநோய்யால் பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ரசவாதி: இந்த திரைப்படத்தை தொடர்ந்து, அர்ஜூன் தாஸ், தற்போது ரசவாதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ரம்யா சுப்ரமணியம் , ரிஷிகாந்த், தான்யா,ஜிஎம் சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை டி.என் .ஏ இந்தப் மற்றும் சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள து. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரசவாதி படம் குறித்து பேசிய படத்தின் இயக்குநர் சாந்தகுமார் மௌன குரு , மகமுனிக்கு மாறாக ராசாவதி படத்தில் காதலில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறன். உறவுதான் இந்தப் படத்தின் மையப் புள்ளி, எனது முதல் இரண்டு படங்களில் காதல் என்பது ஒரு புற அம்சமாகவே இருந்தது. ஆனால் ராசாவதியில், உறவுகளில் உள்ள பிரச்சினைகளை படம் ஆராய்வதால், காதல் இந்த படத்தில் அதிகமாக சொல்லப்பட்டு இருக்கும்.
அருள்நிதி நடித்த மௌனகுரு திரைப்படம் எப்படி தனித்து நின்று பேசப்பட்டதோ, அதே போல் அர்ஜுன் தாஸால் ராசாவதியும் தனித்து நிற்பார். மேலும் அர்ஜுன் தாஸ் இந்த கேரக்டருக்கு பக்கவாக பொருத்தி இருக்கிறார் என்றார். மேலும், பாலோ கோயல்ஹோவின் பிரபலமான நாவலான தி அல்கெமிஸ்டுக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் சாந்தகுமார்.