Now Reading
ராஜமெளலி, பகத் ஃபாசிலை நம்பிப் போனா.. அவ்ளோதான்.. புலம்பும் ஃபேன்ஸ்!

ராஜமெளலி, பகத் ஃபாசிலை நம்பிப் போனா.. அவ்ளோதான்.. புலம்பும் ஃபேன்ஸ்!

ராஜமெளலி தயாரிப்பில் பகத் ஃபாசில் நடித்துள்ள மேஜிக் ஃபேண்டஸி படமான டோன்ட் ட்ரபிள் தி ட்ரைபிள் திரைப்படமும் இன்று திரையில் வெளியானது. காலாண்டு விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளை டார்கெட் செய்வது போல ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன.

ஃபேண்டஸி படமான இந்த படம் குழந்தைகளை கண்டிப்பாக கவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் ரொம்ப ட்ரபிள் பண்ணிடுச்சு, அந்த பக்கமே போக வேண்டாம் என எக்ஸ் பக்கத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

ட்ரபிள்சம் வாட்ச்: விமர்சகர் வெங்கி டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தை பார்த்துவிட்டு ரொம்பவே ட்ரபிள்சம் வாட்ச் என சோலியை முடித்துள்ளார். பகத் ஃபாசில் டப்பிங் முதற்கொண்டு தெலுங்கு அறிமுக படத்தில் சரியாக இல்லை. ஒரு சில காட்சிகள் மட்டுமே மொத்த படத்தில் ரசிக்கும் படியாக உள்ளது. பகத் ஃபாசில் எவ்வளவு தான் முயற்சித்தாலும் அவர் ஒருவரால் மட்டுமே படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. இயக்குநர் சிறு பிள்ளைத்தனமாகவே கதை மற்றும் திரைக்கதையை உருவாக்கியது தான் சோதனை என விமர்சித்துள்ளார்

டிசாஸ்டர்: டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் டிசாஸ்டர் படம். 5க்கு 1.5 மார்க் தான் கொடுக்க முடியும். தயவு செய்து இந்த படத்தை தியேட்டரில் யாரும் பார்க்க வேண்டாம். ஸ்கிப் செய்து விடலாம் என்றே இந்த நெட்டிசன் பங்கமாக ரோஸ்ட் செய்துள்ளார்.

See Also

ராஜமெளலி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வாரணாசி படத்தில் ஹீரோவாக நடித்து வரும் மகேஷ் பாபு முன்னதாக பாராட்டித் தள்ளினார். அதே போல ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆரும் இதுதான் பெஸ்ட் படம் என்கிற ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளிய நிலையில், இன்று படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே என இருவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)