150 வயசு வரை நடிப்பேன்…சரத்குமார் பேச்சு …
பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கும் ஹிட் லிஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சரத்குமார் 150 வயசு ஆன பிறகு கூட நடிப்பேன் என்று பேசினார். இவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனம் தயாரிக்கும் படத்தை, இயக்குனர்கள் சூர்யகதிர், K.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர். இதில், சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் மேனன், சமுத்திரகனி,ஸ்மிரிதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபிநக்ஷத்ரா,அபிநயா,சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ‘கருடா’ராமச்சந்திரா, ‘மைம்’கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சரத்குமார். முன்னாள் முதல்வர் கலைஞர் முன்னிலையில், அவர்கள் 175 ஆவது நாள் பட விழாவை இங்கு கொண்டாடினோம். அந்த இடத்தில் ஹிட் லிஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அப்போது ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் தினமும் உடற்பயிற்சி செய்வதுதான். இயக்குனர் மிஷ்கின் பேசும்போது அனைவரும் இறுக்கமாக இருந்தீர்கள். இது சந்தோஷமான ஒரு நிகழ்வு இது ஒரு குடும்ப விழா என்றார். 150 வயது வரை நடிப்பேன்: தொடர்ந்து பேசிய சரத்குமார், சூரியவம்சம் 2 பண்ணலாம் என்று யோசித்தோம் ஆனால், அது சரியாக அமையவில்லை, சூரியவம்சம் 2 , 3, 4 எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும், எனக்கு 150 வயசு ஆன பிறகு கூட நடிப்பேன். இதைக்கேட்டு பத்திரிக்கையாளர்கள் சரத்குமார் 150 வயசு வரை வாழ்வார் என்று செய்தி போடுவார்கள், எது எப்படியோ எனக்கு சந்தோஷம் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வணங்கும் பாபாவே 4 ஆயிரம் ஆண்டு வாழ்ந்து இருக்கிறார். புரட்சித் தலைவர், மக்கள் தலைவி இல்லை என்றாலும், இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அது தான் வாழ்க்கை என்று அந்த விழாவில் சரத்குமார் பேசினார். கோலாகல விழா: மேலும், பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், பார்த்திபன், மிஷ்கின், பாக்கியராஜ், எழில், பேரரசு, தேசிங்கு பெரியசாமி, சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி, ஜெயம் ரவி, ஜீவா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.