ஹவுஸ் ஆஃப் த ட்ராகன் எந்த ஓடிடி தளத்தில் எப்போது ரிலீஸ்…
ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் வெப் சீரியஸ்களுக்கு கனிசமான வரவேற்ப்பு இருந்து வந்தது. கொரோனா காலகட்டத்தில் வெப் சீரியஸ்களுக்கான வரவேற்பும் ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்ந்தது. பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் ரிலீசான வெப் சீரியஸ்களை தேடித் தேடி பார்க்கத் தொடங்கினர். அப்படி அதிகமாக இந்தியாவில் தேடப்பட்ட வெப் சீரியஸ்களில் கேம் ஆஃப் த்ரோன்ஸை கட்டாயம் குறிப்பிடலாம்.ஒரு அரியணையை தக்கவைக்க போராடும் லானிஸ்டர் குடும்பமும், அரியணையை அடைய போராடும் நெட் ஸ்டார்க் குடும்பமும், மறுபுறத்தில் தனது அப்பாவிடம் இருந்து பிடுங்கப்பட்ட அரியணையை தன்னிடம் இருக்கும் நெருப்பைக் கொப்பளிக்கும் மூன்று ட்ரேகன்களை மட்டும் நம்பி ஒரு மாபெரும் படையை உருவாக்கி அரியணையை நோக்கி வரும் மேட் கிங்கின் (Mad King) மகள் டனேரியஸ் டர்கேரியன் ஒரு புறம் அரியணையை நோக்கி வந்து கொண்டு இருக்க, இவர்களை எல்லாம் நொடிப்பொழுதில் முடித்துக் கட்டும் வல்லமை கொண்ட வொய்ட் வாக்கர்ஸ் அரசனான நைட் கிங்கும் அரியணையை நோக்கி வந்துகொண்டு இருக்க, இறுதியில் அரியாசணத்தை யார் அடையப்போகின்றார்கள் என்பதை மிகவும் அட்டகாசமாக படமாக்கியிருப்பார்கள். முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதையில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் எதார்த்த வாழ்வோடு ஒன்றிப் போகும் அளவிற்கு படமாக்கியதுதான் இந்த வெப் சீரியஸ்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாக காரணமாக பார்க்கப்படுகின்றது.மொத்தம் 8 சீசன்களாக வெளியான இந்த வெப் சீரிஸில் மட்டும் மொத்தம் 73 எப்பிசோட்கள் உள்ளது. இதனை மொத்தம் 18 இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். நீண்ட வெப் சீரிய்ஸாக இது இருந்தாலும் இந்த வெப் சீரியஸ் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் குறையாததால், இந்த வெப் சீரியஸ் குழு இதற்கு முந்தைய காலகட்டம் எனக் கூறி மேட் கிங் எப்படி உருவாகின்றான் என்பதை விளக்கும் விதமாகவும் டர்கேரியன் குடும்பம் எப்படிப்பட்டது என்பதையும் விளக்கும் விதமாக “ஹவுஸ் ஆஃப் த ட்ரேகன்” என்ற வெப் சீரியஸை அறிமுகம் செய்தது. இதன் முதல் சீசனே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கதை இந்த வெப் சீரிஸில் இடம் பெற்று வருகின்றது.ஹவுஸ் ஆஃப் த ட்ரேகன் முதல் சீசனில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மன்னன் வெலேரியஸ் டர்கேரியனின் மூத்த மனைவிக்குப் பிறந்த மகள் ரைனிரா டர்கேரியனுக்கும், வெலேரியிஸின் இரண்டாவது மனைவியும் ரைனிராவின் தோழியுமான ஆலிசண்ட் மகன்களுக்கும் இடையில் நடக்கும் பிரச்னைகள் அரியணையை அடைய வெலேரியஸின் தம்பி டீமன் செய்யும் சூழ்ச்சிகள், ஒருகட்டத்தில் டீமனும் ரைனிராவும் இணைந்து சாம்ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற எடுக்கும் அதிரடி முடிவுகளும் ரசிகர்களுக்கு விருந்துதான். இவர்களை எதிர்கொள்ள ஆலிசண்ட் என்ன செய்கின்றார் என்பதெல்லாம் சுவாரஸ்யாமாகச் செல்லும்.இந்நிலையில், ஹவுஸ் ஆஃப் த ட்ரேகன் வெப் சீரீஸின் இரண்டாவது சீசன் வரும் 17ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் ஒவ்வொரு எப்பிசோடாக ஜியோ சினிமா ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸாக உள்ளது. மொத்தம் 8 எப்பொசோட்களைக் கொண்ட இந்த சீரிஸின் இரண்டாவது எப்பிசோட் ஜூன் 24ஆம் தேதியும், ஜூன் 31இல் மூன்றாவது எப்பிசோடும், ஜூலை 7இல் நான்காவது எப்பிசோடும், ஜூலை 15ஆம் தேதி ஐந்தாவது எப்பிசோடும் வெளியாகவுள்ளது. ஜூலை 7வது எப்பிசோட் ஜூலை 29ஆம் தேதியும் ஆகஸ்ட் 5ஆம் தேதி கடைசி எப்பிசோடும் ரிலீசாகவுள்ளது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இது ஹவுஸ் ஆஃப் த ட்ராகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.