Now Reading
வருகிறது ஜென்டில்மேன் 2

வருகிறது ஜென்டில்மேன் 2

மிக பெரிய வெற்றி படமாக அமைந்த ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் ஏற்கனவே முடிவு செய்து இருந்தார். இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் எடுக்க உள்ளதாகவும் அதற்காக ஜென்டில்மேன் பிலிம் இண்டர்நேஷ்னல் எனும் பெயரில் புதிய நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. நீண்ட காலமாக எந்த ஒரு அப்டேட்டும் இப்படம் குறித்து வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது புதியதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன்.

முதல் பாகத்தில் பணியாற்றிய  ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதில் ஜென்டில்மேன் 2 படத்தினை இயக்கவுள்ளார் ஆஹா கல்யாணம் படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா. மேலும் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி. இவர் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ, ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முதலில் இப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார் என கூறப்பட்டது ஆனால் தற்போது நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்கவுள்ளார் என்றும் இப்படத்தின் லீட் ரோலில் சேத்தன் சீனு நடிக்கிறார் எனும் தகவலும் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த சேத்தன் சீனு முதன்முறையாக ஜென்டில்மேன் 2 திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)