கேள்விகள் எழுப்பும் ரசிகர்கள் …தலைவர் படம் டைட்டில் டிஸ்கோவா
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 வது படத்தின் அப்டேட் ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் தலைப்பு இதுதானா என லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ள ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சந்தீப் கிஷன், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் படிப்படியாக கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம், மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ உள்ளிட்ட படங்களை ரசிகர்களுக்கு கொடுத்த நிலையில், அடுத்ததாக தலைவர் 171 வது படத்தை இயக்கி உள்ளார்.
தலைவர் 171 ஆவது படத்தின் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்த நிலையில் தற்போது படத்தின் டைட்டில் இப்படி வித்தியாசமாக உள்ளதே என பலரும் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். ‘டிஸ்கோ’ தான் டைட்டிலா?: தலைவர் 171 படத்திற்கு ‘டிஸ்கோ’ என லோகேஷ் கனகராஜ் டைட்டில் வைத்துள்ளாரா என்கிற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று மாலை 6:00 மணிக்கு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாளை மாலை 6 மணி முதல் D.I.S.C.O” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக கோட் என்பது போல டிஸ்கோ படத்திற்கும் மிகப்பெரிய விளக்கம் இருக்குமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
தலைவர் 171வது படத்திற்கு டைட்டில் டிஸ்கோ தான் என்றும் அந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ நாளை மாலை 6:00 மணிக்கு தாறுமாறாக வெளியாகப் போகிறது என்றும் நடிகர் ரஜினிகாந்தின் லுக்கை பார்த்து இந்திய சினிமாவே மிரள போவதாகவும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
தலைவர் 171வது படத்தின் டைட்டில் கழுகு என வைக்கப்பட்டு இருப்பதாகவும், தங்கம் என வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அதிரடியாக அந்த படத்துக்கு டிஸ்கோ என வித்தியாசமாகவும் பெப்பியாகவும் லோகேஷ் கனகராஜ் டைட்டில் வைத்து மாஸ் காட்டியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தங்கமகன்: ‘டிஸ்கோ’ என லோகேஷ் கனகராஜ் ட்வீட் போட்டுள்ள நிலையில், தலைவர் 171வது படத்தின் டைட்டில் டிஸ்கோவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தங்கமகன் படத்தில் ‘டிஸ்கோ’ பாடல் இடம்பெற்ற நிலையில், ‘தங்கம்’ அல்லது ‘தங்கமகன்’ என்கிற தலைப்பு வைக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். ஏப்ரல் 22ம் தேதி மாலை 6 மணிக்கு டைட்டில் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகிறது.