என் பெயரில் போலி கணக்கு.. இன்ஸ்டாவில் நடிகை ஷாலினி

அஜித்தின் மனைவி ஷாலினி இவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கணவரோடு, குழந்தைகளோடு இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது, இவர் இன்ஸ்டாகிராமில் எக்ஸ் தள பக்கத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபிஷாலினி, பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார். அதன்பின் ஹீரோயினாக விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஷாலினிக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. இன்று வரை அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாகவே இருக்கிறது.காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றிக்கு பிறகு அமர்க்களம், கண்ணுக்குள் நிலவி, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். இரண்டாவது படத்திலேயே அஜித்துடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அமர்க்களம் படத்தில் ஷாலினி நடிகையாக மட்டுமில்லாமல், சொந்தக்குரலில் பாட என்ற பாடலையும் பாடி பாடகியாகவும் மாறினார்.அஜித் ஷாலினியிடம் காதலை சொல்ல அதை ஷாலினி ஏற்றுக்கொண்டதை அடுத்து 2000ம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு எட்டு ஆண்டுகள் கழித்து அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர். தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா அப்பா,அம்மாவை விட வளர்ந்து செம க்யூட்டாக இருக்கிறார்.இந்நிலையில் நடிகை ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், எக்ஸ் தளத்தில் என் பெயரில் இயங்கி இருப்பது எனது அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை. எனவே அதை நம்பவோ, ஃபாலோ செய்யவோ வேண்டாம் என பதிவிட்டுள்ளார். பிரபலங்களை பெயரை பயன்படுத்தி பலர் இதுபோன்ற போலி கணக்குகளை தொடங்கி வருகின்றனர்.நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, ம ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிட் கள் எடுக்கப்பட்டன. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்கும் எனக் கூறப்படுகிறது. அங்கு, நடிகர் அஜித்தின் சண்டைக் காட்சிட் கள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.