Now Reading
துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

துல்கர் சல்மான் – ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 – #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. ‘நேச்சுரல் ஸ்டார் ‘ நானி கிளாப் அடித்து தொடங்கி வைக்க, வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

பன்முக திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி- தனித்துவம் மற்றும் ஒரு நடிகராக சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை எப்போதும் விரும்புபவர். அவரது 41 வது திரைப்படத்தில் #DQ 41 அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார். சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெற்றிகரமான தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாராகும் பத்தாவது திரைப்படம் #SLV 10 என்பது- இந்நிறுவனத்தின் புதிய மைல் கல்லை குறிக்கிறது.

இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான தொடக்க நிகழ்வில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சுப முகூர்த்த படப்பிடிப்பிற்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கலந்துகொண்டு கிளாப் போர்டு அடித்தார். இயக்குநர் புச்சிபாபு சனா (Buchi Babu Sana) கேமராவை இயக்கினார்.‌ குன்னம் சந்தீப் (Gunnam Sandeep), நானி மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். இப்படத்தின் முதல் காட்சியை ரவி நெலகுடிடி இயக்கினார்.

‘தசரா’ மற்றும் ‘தி பாரடைஸ்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவும் (Srikanth Odela) இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வலுவான வெற்றியை வழங்கி வரும் துல்கர் சல்மானை சமாதானப் படுத்துவது எளிதான சாதனை அல்ல .இருப்பினும் இயக்குநர் ரவி நெலகுடிடி துல்கர் சல்மானின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு தனித்துவமான மற்றும் புதிய கதையை கொண்டு வந்துள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பு தரம் மற்றும் தொழில்நுட்பம் சர்வதேச தரம் என உறுதி அளிக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள் அனய் ஓம். கோஸ்வாமி (om Goswamy) ஒளிப்பதிவை கையாள தேசிய விருதை வென்ற ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .அவினாஷ் கொல்லா (Avinash Kolla) தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.‌

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள்’ நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.‌

See Also

நடிகர்கள்: துல்கர் சல்மான்

தொழில்நுட்ப குழு :

எழுத்து & இயக்கம் : ரவி நெலகுடிடி
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல்‌ வி சினிமாஸ்
இணை தயாரிப்பாளர் : கோபிசந்த் இன்னா முரி
சி இ ஓ – ( CEO) விஜயகுமார் சாகந்தி
இசை :ஜீ. வி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : அனய் ஓம் கோஸ்வாமி.
தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு: ‌யுவராஜ் .

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)