DSP விமர்சனம் இதோ!
வருத்தப்படாத வாலிபர் சங்கர், ரஜினி முருகன், சீமைராஜா போன்ற கலகலப்பான படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியிருக்கும் படம் டிஎஸ்பி. விஜய்சேதுபதி, அமிர் கீர்த்தி, ஷிவானி நாராயணன், சூரி, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படம், உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
பிரபல பூக்கடை வியாபாரி ஞானசம்பந்தத்தின் மகன் விஜய்சேதுபதி. மகன் அரசு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்பதால் தனது தொழிலில் எந்த வேலையையும் மகனுக்கு தராத பாசக்கார தந்தை.
விஜய்சேதுபதியில் நெருங்கிய நண்பரின் தந்தை கொலை செய்யப்படுகிறார். எப்படியாவது கொலையாளியை தண்டிக்க சட்டமுயற்சிகளை மேற்கொள்ளும் விஜய் சேதுபதிக்கு தோல்வியே நடக்கிறது.
ஒரு கட்டத்தில் வில்லனுடன் மோதும் போது, விஜய் சேதுபதியை போலீஸ் பிடித்துச் செல்கிறது. தன்னை பொதுமக்கள் தரப்பில் தாக்கிய விஜய் சேதுபதியை பழிவாங்க துடிக்கும் வில்லன், பயந்து ஓடி ஒழிந்து ஒரு கட்டத்தில் டிஎஸ்பி.,யாக மாறி, வில்லனை எதிர்கொள்கிறார் விஜய் சேதுபதி. அதன் பின் வில்லன்-விஜய் சேதுபதி மோதல் என்ன ஆனது என்பது தான் கதை!
தொடர் தோல்வி படங்களால் தவித்து வந்த விஜய் சேதுபதிக்கு டிஎஸ்பி திரைப்படம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான கதைக்களத்தில், தனது வழக்கமான கலகலப்பையும் தவறவிட்ட இயக்குனர் பொன்ராமின் திரைக்கதை அவருக்கு மட்டுமல்லாமல் விஜய் சேதுபதிக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி.இமானின் இசையில் பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், கேட்கும் ரகத்தில் இருக்கிறது. பின்னணியில், இமான் முத்திரை தெரிகிறது. மற்றபடி, சூரி, விஜய் டிவி புகழ் காமெடி கொஞ்சம் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.
கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமெண்ட் என அனைத்தையும டிராக்காக எடுத்துச் செல்லாமல், கதையோடு இன்னும் கலந்து கொடுத்திருக்கலாம். அதுவே படத்தின் குறையாகவும் இருந்தது.
Acting
Direction
Music