தசரா விமர்சனம்
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நானி. இவர் தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்த “தசரா” கீர்த்தி படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாண் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
தரணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நானி மற்றும் சூரி கதாபாத்திரத்தில் நடிக்கும் தேக்ஷித் ஷெட்டி என இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள். ஆனால் இருவரும் சேர்ந்த கிராமத்தில் இருக்கும் வெண்ணிலாவை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார்கள். வெண்ணெலாவின் மீது சூரிக்கு இருக்கும் காதலை அறிந்த தரணி தன்னுடைய காதலை தியாகம் செய்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உதவுகிறார். அவர்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்கிறார்களா? சிவண்ணா ராஜண்ணா என்ற கதாபாத்திரத்தில் வரும் கிராமத்து அரசியல் வாதிகளினால் எப்படி தரணி மற்றும் சூரியின் வாழ்க்கை எப்படி மாற்றுகிறது என்பதுதான் மீதி கதை. கீர்த்திசுரேஷ் மற்றும் நானி இதற்கு முன்னர் “நேனு லோக்கல்” என்ற படத்தில் நடித்திருந்தனர். அதற்கு பிறகு இந்த “தசரா” படத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் ட்ரைலர் வெளியான போது இப்படம் “புஷ்பா” படத்தை போல இருக்கிறது என பல கூறிவந்த நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் புஷ்பா படத்தை இந்த பார்த்த தூக்கி சாப்பிட்டுவிடும் என கூறும் அளவிற்கு “தசரா” படமானது உருவாக்கி உள்ளது பாராட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கீர்த்தி சுரேஷ் நடிப்பு மிகவும் பிரமாதம். அதே போல கண்டிப்பாக நடிகர் நானி அவர்களுக்கும் இடப்படம் பிளாக் பாஸ்டர் காம்பேக் படமாக இருக்கும்.
இயக்குனர் புதுமுகமாக இருந்தாலும் அவரின் இயக்கம் பாராட்டுகளை பெறுகிறது. ஆனால் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்ற முதல் பாதி முடிந்து இரண்டாம் பாதியில் சில இடங்களில் முடிந்து மெதுவாக் சென்றாலும் கிளைமாக்ஸ் காட்சி பிரமாதமாக அமைந்துள்ளது. கண்டிப்பாக நானி அவர்களின் கிளைமாக்ஸ் கட்சியில் வரும் நடிப்பிற்கு தேசிய அளவில் பாராட்டுக்கள் கிடைக்கும். அதே போல பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் கதைக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார். கண்டிப்பாக இந்த படம் இந்திய அளவில் பிளாக் பாஸ்டர் படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
Acting
Direction