டோரதி திரைப்படம் விமர்சனம்..
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் டோரதி திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்திய சினிமாவிலேயே இது முக்கியமான படம் என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் டோரதி படம் குறித்து பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
“திருநர்கள் (திருநங்கைகள்/திருநம்பிகள்) பாலியல் தொந்தரவில் ஈடுபடுகிறார்கள் என்று குறிப்பிட்டு மீமஸ்கள் வந்தன. இது எவ்வளவு உண்மை அல்லது பொய் என்று அங்கே போய் பார்த்தால்தான் தெரியும். அவர்கள் பாலியல் தொழிலுக்குள் செல்ல வேண்டிய சூழலை இந்த சமூகம் ஏன் உருவாக்க வேண்டும். திருநர்களுக்கும், தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மூன்றாம் பாலினத்தில் கடவுளே இருக்கிறார்.
அவர்கள் பிறக்கும்போதே அந்தப் பெண்மை அவர்களுக்குள் வந்துவிடும். அதை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களாகவே பெண்ணாக உணர தொடங்கிவிடுவார்கள். உடலுக்குள் நடக்கும் மாற்றம் அது. அவர்கள் சமூகத்துக்கு கேடு கிடையாதே. சிலரால் ஆஃபிஸராக மாற முடிகிறது. பலர் ஏன் கசக்கி போடப்படுகிறார்கள்?. கார்த்திக் சுப்புராஜ் தவறாக படத்தை எடுக்கவில்லை
சனந்த்தும், ரிஷிகாந்த்தும் 15 வருட உழைப்புக்கு பிறகு தங்களது கரியரை பெட் கட்டியிருக்கிறார்கள். சனந்த் மூன்றாம் பாலினத்தவராகவே மாறிவிட்டார். அது சாதாரணமான விஷயம் இல்லை. கிண்டல் செய்து கமெண்ட் அடிப்பார்கள். ஆணாதிக்கம்தான் இங்கே இருக்கிறது. சக பாலினமான பெண்ணையே மதிப்பதில்லை. நான்லாம் அப்படி இல்லை என்று பலர் வெளியே சொல்வார்கள். மூன்றாம் பாலினமாக உணரும்போது குடும்பத்தில்கூட சொல்ல முடியாது. நிறைய பேர் வெளியே சொல்லாமல் ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ளும் சமூகம் இருந்தால் போதும்.
பாலியல் தொழிலில் ஈடுபட அவர்களுக்கு தலை விதியா?.. அவர்களுக்கும் எல்லா உலக அறிவும் இருக்கிறது. எல்லாம் இருக்கிறது. சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. கார்த்திக் சுப்புராஜால் ஆணாதிக்க படம் எடுப்பது ரொம்ப ஈஸி. அவருக்கு பணமும் வரும், புகழும் வரும். இந்தப் படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?.. அவர் பணம் வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள். முதலில் படங்களுக்கு ஃபண்ட் செய்யமாட்டார்கள். இது பார்க்காத கதை எல்லாம் இல்லை. காதலிக்கும் பெண்ணை எரிப்பதை பெருமையாக நினைத்தார்கள். தமிழ்நாட்டிலேயே இது நடந்தது. எத்தனையோ பெண் சிசுக்கள் கொல்லப்பட்டிருக்கின்றன. நீங்கள் எல்லாம் நியாயம், தர்மத்தை பற்றி பேசலாமா என்று கார்த்திக் சுப்புராஜ் கேட்கிறார். உங்களுக்கு என்ன மூன்றாவது பாலினம் மீது அக்கறை என்று கேட்கிறார். சனந்த் பெண்ணாக மாறும் முழு ப்ராசஸும் படத்தில் இருக்கிறது. அதை பார்த்துவிட்டு பேசுங்கள். இந்தப் படத்தில் இளையராஜா உள்ளே வந்திருக்கிறார் என்றால் அது சாதாரணமான விஷயம் இல்லை. அவர் பணத்துக்காகவெல்லாம் இதில் வேலை செய்திருக்கமாட்டார். கதை சொல்லும் ஆழத்தை அவர் புரிந்துகொண்டார். அதைத்தான் இசையாக கொண்டு வந்திருக்கிறார். மணி மணியாக இருக்கிறது இசை. நல்ல மனிதர்கள் இந்தப் படத்துக்கு சென்று ஆதரவு கொடுங்கள்” என்றார்.
