பத்தினி பட்டமே வேண்டாம்.. நடிகை ரேகா நாயர் பேட்டி
சின்னத்திரை நடிகையான ரேகா நாயர், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பிரபலமானார். தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், எந்த பத்தினிக்கும் மெரினா பீச்சில் சிலை வைக்கப்படுவதில்லை, என்னை நீங்கள் பத்தினி லிஸ்ட்டில் போடவே வேண்டாம் என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
சீரியல் நடிகையான நடிகை ரேகா நாயகர், வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பால கணபதி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். எந்தவிதமான கருத்தாக இருந்தாலும், அதை பொது இடத்தில் தைரியமாக பேசக்கூடியவர் நடிகை ரேகா நாயர்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ரேகா நாயர் தனது மகளுடன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு இப்போது 38 வயதாகிறது, எனக்கு இப்போது இருக்கும் தைரியம் என் மகளுக்கு 15 வயதிலேயே இருந்தது. நான் எந்தமாதிரியாக பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கிறேன் என்பதை என் மகள் பார்த்து இருக்கிறாள். நான் பத்தாவது படிக்கும் போதே எல்லாவிதமான அவமானத்தையும் சந்தித்து விட்டேன். அதன் மூலம் கிடைத்த அனுபத்தை பார்த்து பார்த்து என் மகள் வளர்ந்தால், இந்த சமூகத்தில் நடப்பதை பார்த்து என் மகளிடம் ஒன்று கூறுவேன். என்ன நடந்தாலும் என்னிடம் ஓப்பனாக சொல்லிவிடு. எதுவாக இருந்தாலும். ஒருத்தனை காதலித்தால் என்னிடம் சொல், அவனை பற்றி விசாரித்து அவன் நல்லவாக இருந்தால் ஓகே, கெட்டவனாக இருந்தால் கட் பண்ணிவிடுவேன் என்றார். எல்லாமே பிரச்சனை தான்: இன்றைக்கு பெண்களுக்கு எல்லாமே சவாலாக இருக்கிறது, ஒரு பெண்ணுக்கு நிறைய முடி இருந்தாலும் பிரச்சனையாக இருக்கிறது. இல்லை என்றாலும் பிரச்சனையாகவே இருக்கறிது.ஒரு பெண் ஒரு செருப்பு வாங்கினால் கூட, அதை இந்த சமூதாயம் வேற கண்ணோட்டத்தில் பார்க்கிறது. நான் சென்னைக்கு வந்த போது ஒரு நாளைக்கு 7 சேனலில் வேலைப் பார்த்து இருக்கிறேன். ஒரு நிகழ்ச்சிக்கு 300 ரூபாய். அந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு, ஒரு வீட்டைவாடகைக்கு எடுத்து தாங்கினேன். இப்படி நான்பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாது, அவன் எப்படி சம்பாதித்தால் என்று தான் பேசும்
தொடர்ந்து பேசிய அவர்கள், இங்கே நல்லது பண்ண போனால் நமக்கு தான் பிரச்சனையாகிவிடுகிறது. இன்று வரை விஜே சித்ரா தற்கொலை வழக்கில் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறேன். அவளுடைய குடும்பம் கூட கோர்ட்-க்கு போவதை நிறுத்திவிட்டார்கள், நான் போய்ட்டே இருக்கிறேன். எனக்கு வலிக்கிறது, எனக்கு வலிக்கிறது என்று அதை உங்களிடம் சொன்னால் பிரச்சனை என்று இங்கே சொல்கிறார்கள். அப்போது அமைதியாக இருந்தால் கெட்டப்பெண் என்கிறார்கள். ஆமாம் நான் கெட்டப்பெண் தான், எனக்கு உங்களுடைய பொண்ணாடையோ, பூமாலையோ, நல்ல அங்கீகாரமோ வேண்டாம். எந்த பத்தினிக்கும் மெரினா பீச்சில் சிலை வைத்ததே கிடையாது. என்னை நீங்கள் பத்தினி லிஸ்ட்டில் போடவே வேண்டாம். எனக்கு அது கவலையே கிடையாது என்று ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.