விவாகரத்து கேட்ட தனுஷ் அதிர்ச்சியில் ரஜினி
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருமே டீன் ஏஜில் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டுமென்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த்தை தனுஷ் சந்தித்ததாக புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
தனுஷ் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அவர் அறிமுகமானபோது அவரை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் தனது குடும்ப சூழ்நிலை கருதியும், வென்று தனது குடும்பத்தை கரையேற்ற வேண்டும் என்பதை நினைத்தும் அமைதியாகவே அதனை கடந்து சென்றார். அடுத்ததாக அவர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் அவரை பலரிடமும் கொண்டு சேர்த்தது. முக்கியமாக அவரை கிண்டல் செய்தவர்கள் எல்லாம் கொஞ்சம் அமைதியாக ஆரம்பித்தார்கள்.
காதல் கொண்டேன் ஹிட்டுக்கு பிறகு தனுஷின் நடிப்பில் பல படங்கள் வெளியாகின. அவரும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டே சென்றார். ஒருகட்டத்தில் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் அவர். மேலும் ஹாலிவுட்டுக்கும் சென்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக குபேரா, இளையராஜா உள்ளிட்ட படங்களும் வெளியாகவிருக்கின்றன. மேலும் இயக்குநர் அவதாரத்தையும் அவர் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் தனுஷ். சினிமாவுக்குள் நுழைந்தபோது எப்படி கேலிகளையும், விமர்சனங்களையும் சந்தித்தாரோ; அதேபோல் போயஸ் கார்டனுக்குள் ரஜினியின் மருமகனாக நுழைந்தபோதும் அதே கேலிகள், விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் காதல் துணையோடு அதையெல்லாம் அசால்ட்டாக கடந்துபோனார் தனுஷ். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 18 வருடங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை கடந்த 2022ஆம் ஆண்டு தாங்கள் பிரிவதாக இருவருமே அறிவித்தனர். இருந்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. எனவே கண்டிப்பாக இரண்டு பேரும் இணைந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பினர். மேலும் அவர்களை சேர்த்துவைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாகவும் தகவல்கள் வேகமாக பரவிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனுஷ் குடும்பத்தை ரஜினி குடும்பம் அவமதித்ததை தனுஷால் மறக்கவே முடியவில்லை அதனால்தான் இந்த முடிவுக்கு அவர் சென்றதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த்தை தனுஷ் சில நாட்களுக்கு முன்பு போய்ஸ் கார்டனில் நேரில் சந்தித்ததாகவும்; அப்போது மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரஜினி கேட்டதாகவும்; அதற்கு தனுஷோ தனக்கு விவாகரத்து கண்டிப்பாக வேண்டும் என கறாராக சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை என்பதும் தெரியவில்லை.