Now Reading
‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தமிழில் வரவிருக்கும் ஆக்ஷன் கலந்த த்ரில்லர்  திரைப்படம் கோப்ரா.  செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்து இருக்கும் இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இர்பான் பதான், ரோஷன் மேத்தியூ, மிர்னாலினி ரவி, ரோபோ ஷங்கர், சிந்து ஷியாம், கன்னிகா சுப்பிரமணியன், பத்மப்ரியா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இருக்கிறது.  இப்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த இந்த படம் எப்போது வெளியாகும் என்கிற தகவலை படக்குழு அறிவித்துள்ளது.  அதன்படி, கோப்ரா படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியை வெளியாக இருப்பதாக படக்குழு கூறியுள்ளது.

ஏற்கனவே மே மாத இறுதியில் படம் வெளியாகும் என்று சில தகவல்கள் வெளியானது, ஆனால் படப்பிடிப்பு தாமதமானதால் தற்போது சுதந்திர தின வாரத்தையொட்டி இப்படம் வெளியாக போகிறது.  ஏற்கனவே வெளியான இப்படத்தின் பிரம்மாண்டமான டீசர் படத்தை பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)