சந்திரமுகி 2 விமர்சனம்

படத்தில் ரங்கநாயகியாக நடிக்கும் ராதிகா குடும்பத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மொத்த குடும்பமும் குலதெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்தால் தான் கோயிலுக்கு சரியாகும் என்று சொல்கிறார்கள். ஆனால், ராதிகா மகள் வீட்டை விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொள்கிறார். இதனால் அவரை ஒதுக்கி விடுகிறார்கள். பின் ராதிகா மகள் இறந்து விடுகிறார். தற்போது பிரச்சனை தீர குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் இறந்து போன தன்னுடைய மகளின் குழந்தைகளும், அவர்களுக்கு பாதுகாவலனாக ராகவா லாரன்ஸும் ராதிகா வீட்டிற்கு வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் குலதெய்வ கோயிலுக்கு ராதிகா அழைத்துக் கொண்டு செல்கிறார். பின் அவர்களை குலதெய்வ கோயிலுக்கு அருகில் இருக்கும் வேட்டையபுரம் அரண்மனையில் தங்க வைக்கிறார்.

அனைவரும் எதிர்பார்த்தது போல சந்திரமுகி அறைக்குள் ஒருவர் செல்கிறார். அவர் வழக்கம் போல் தப்பித்து விடுகிறார். அதற்குப் பிறகு சந்திரமுகி யாரு உடம்பில் புகுந்தார்? சந்திரமுகியின் சந்திரமுகி வேட்டையன் என்ன செய்தார்? ராகவா லாரன்ஸ்க்கும் வேட்டையனுக்கும் என்ன தொடர்பு? என்பது தான் படத்தின் மீதி கதை. ராகவா லாரன்ஸ் வழக்கம் போல் இல்லாமல் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால், காமெடி காட்சிகள் பெரிதாக செட் ஆகவில்லை.

மேலும், வேட்டையின் கதாபாத்திரத்தில் அவர் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். இவரை அடுத்து கங்கனாவின் நடிப்பு, நடனம் அனைத்தும் சூப்பராக இருக்கிறது. முதல் பாகத்தில் வடிவேல் சூப்பராக காமெடிகள் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால், இந்த படத்தில் கொஞ்சம் குறைவு என்று தான் சொல்லணும். பி வாசுவின் இயக்கம் சிறப்பாக இருக்கிறது. சந்திரமுகி காட்சிகளில் அவர் பிரம்மாண்டமாக வியக்க வைக்கும் அளவிற்கு காண்பித்து இருக்கிறார். குறிப்பாக வேட்டையன்- சந்திரமுகி இருவரும் வரும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.இவர்களை அடுத்து கீரவாணியின் இசை படத்திற்கு கூடுதல் படத்தை சேர்த்திருக்கிறது. பாடல்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கவில்லை என்றாலும் இசை தூள் கிளப்புகிறது. மேலும், படத்தில் இசை மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். ஆக மொத்தம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இந்த படம் ஓகே என்று சொல்லலாம்.

Pros
Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)