Now Reading
“பிரம்மாஸ்திரா” டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது!

“பிரம்மாஸ்திரா” டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது!

பிரம்மாஸ்திரா பாகம் ஒன்றினை திரையில் காண இன்னும் 100 நாட்கள் உள்ளன: திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறான் பிரம்மாஸ்திரா பாகம் 1 : சிவா!

சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர், பெருமை மிகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துடன், விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான பிரமாஸ்திரா பாகம் 1 : சிவா திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் தேதியை அறிவித்து இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு பணிகளை தொடங்கிய நிலையில் படக்குழுவில், சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர், இயக்குநர் அயன் முகர்ஜி மற்றும் புகழ்மிகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் ஏராளமான ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு  அழகிய நகரமான  விசாகப்பட்டினத்திற்கு வந்து இறங்கினர். அவர்களை வாழ்த்துவதற்காக பெரும் ரசிகர் கூட்டம் கூடியிருந்தது. திரை நட்சத்திரங்களை வெறித்தனமான ஆரவாரத்துடனும் அன்புடனும் அந்த ரசிகர் கூட்டத்தினர் வரவேற்றனர். பெரும் ரசிகர் கூட்டத்தின் முன்னிலையில் பிம்மாஸ்திரா திரைப்படத்தின் சிறு காட்சித்துணுக்கை ( Sneak Peek ) வெளியிட்டு, அனைவரையும் மகிழ்வித்தனர். மேலும் புகழ்பெற்ற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சிமாச்சலம் கோவிலில் இறைவனை தரிசித்து, படக்குழுவினர் ஆசி பெற்றனர் .


Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்த மிகச் சிறந்த படைப்பு 09.09.2022 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் திரையரங்குகளில்  வெளியாகிறது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர்,ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி போன்ற இந்திய சினிமாவின் பெரும் நட்சத்திரக் கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளது.

See Also

இந்திய சினிமாவின் பெருமை மிகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தினை வழங்குகிறார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)