Now Reading
சொர்க்கத்தையே மிஞ்சும் BIGG BOSS வீடு

சொர்க்கத்தையே மிஞ்சும் BIGG BOSS வீடு

BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.பிக்பாஸ் சீசன் 6 தமிழ், வரும் அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்  என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.

 

 

 

 

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் பயன்படுத்தப்படும் வீட்டின் புகைப்படங்கள் & வீடியோ வெளியாகி உள்ளன. நீச்சல் குளம், படுக்கையறை, சமையலறை, ஹால், உணவருந்தும் இடம், ஓய்வறை ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பளபளப்பான பூச்சு பூசப்பட்ட நிலையில் உள்ளன. ஏராளமான சொகுசு வசதியுடன் இந்த வீடு அமைந்துள்ளது.

 

 

See Also

 

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)