Now Reading
அட்லீ-ஷாருக்கான் “ஜவான்”படத்தின் டீசர் வெளியிடு

அட்லீ-ஷாருக்கான் “ஜவான்”படத்தின் டீசர் வெளியிடு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் அட்லீ தற்போது  பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ‘ஜவான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)