அக்கா திருமணத்தில் ஆடி அசத்திய அதிதி ஷங்கர் கூடவே அட்லீ ம்ம் ரன்வீர்சிங் ம்ம்

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணம் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
அட்லீ மற்றும் ரன்வீர் சிங்குடன் இணைந்து அதிதி ஷங்கர் தளபதி விஜய்யின் கில்லி பட பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல் கணவர் ரோகித் என்பவரை ஐஸ்வர்யா ஷங்கர் விவாகரத்து செய்த நிலையில், தற்போது தருண் கார்த்திகேயன் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக பல ஆண்டுகள் மாஸ் காட்டி வரும் ஷங்கர் இந்த ஆண்டு ஜூன் மாதம் கமல்ஹாசனை வைத்து இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட காத்திருக்கிறார். விரைவில் அந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா என ஏகப்பட்ட அப்டேட்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது. ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி மற்றும் அர்ஜித் என மூன்று குழந்தைகள் உள்ளனர்
ரோகித் எனும் கிரிக்கெட் வீரரை ஐஸ்வர்யா ஷங்கர் 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக ரோகித்தை உடனடியாக விவாகரத்து செய்து விட்டார் ஐஸ்வர்யா ஷங்கர். தனது மகளுக்கு தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து வைத்திருக்கிறார் ஷங்கர்.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா பிரபலங்கள் பலரும் ஷங்கர் மகளின் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். ரன்வீர் சிங் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ள நிலையில் இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி, எந்திரன், 2.0 என ஹாட்ரிக் அடித்த நிலையில் அவரும் பங்கேற்று இருந்தார். உலகநாயகன் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன், இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என அவரும் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். கல்யாணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்நியன், ஐ படங்களில் நடித்த சியான் விக்ரம், வேள்பாரி படத்தில் நடிக்க காத்திருக்கும் சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ளபதி விஜய்யின் தீவிர ரசிகரான அட்லீ தனது குருநாதர் ஷங்கரின் மகள் திருமண விழாவில் பங்கேற்றார். திருமண வரவேற்பு விழாவில் அதிதி ஷங்கருடன் “அப்படி போடு” பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது. அட்லி மற்றும் அதிதி ஷங்கருடன் இணைந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கில்லி பட பாடலின் ஸ்டெப்ஸ்களை சரியாக போட்டு நடனமாடுவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். அதிதி ஷங்கர் எப்போது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த பாட்டு மட்டுமின்றி மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற “வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கும் ரன்வீர் சிங், அட்லீ மற்றும் அதிதி ஷங்கர் மணமக்களுடன் ஆடிய வீடியோ காட்சிகளும் தற்போது தீயாக பரவி வருகிறது.
தளபதி விஜய் கோட் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில், இந்த திருமண விழாவில் பங்கேற்கவில்லை. விஜய் வரலைன்னாலும் விஜய் பாடல் தான் களைகட்டுகிறது என்றும் விஜய்க்கு பதிலாக அவரது மனைவி சங்கீதா விஜய் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார் என்றும் கூறுகின்றனர்.