Now Reading
துப்பாக்கி சுடும் தளத்தில் அஜித்- வைரல் புகைப்படங்கள்!

துப்பாக்கி சுடும் தளத்தில் அஜித்- வைரல் புகைப்படங்கள்!

நடிகர் அஜித் ஹெச். வினோத் இயக்கிவரும் படத்தில் நடித்துவருகிறார். அஜித்தின் 61ஆவது படமான இதில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துவருகிறார்.

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தை போனிகபூர் தயாரித்துவருகிறார். கல்லூரி பேராசிரியராக நடித்துவரும் அஜித், வலிமையில் இருந்ததுபோல அல்லாமல் இதில் வித்யாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ளாராம்.

இதற்காக உடல் எடை முதல் ஹேட் கட் வரை அனைத்தையும் மாற்றி புதிய லுக்குக்கு மாறியுள்ளார் அஜித் புதிய லுக்கில் அவர் தோன்றும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன.

இந்நிலையில், புதிய லுக்குடன் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில் அவர் காணப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கறுப்பு நிற டீசர்ட்டுடன் தோன்றும் அஜித், துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு சென்றபோது இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

See Also

இது மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பிரபல துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்குடன் அவர் இணைந்து தோன்றும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)