ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்
கோலிவுட்டில் புதியதாக உருவெடுத்த உள்ள ஜானர் காமெடி த்ரில்லர் ஆகும். அந்த காமெடி ஜானரில் சந்தானம் நடிப்பில் உருவான “ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்படம் வெள்ளித்திரையில் ஜோலிக்கிறது.
கிராமத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களைக் கண்டுபிடிக்கும் டிடெக்டிவ் (சந்தானம்) ஆக கதாநாயகன் இருக்கிறார். பிரபலமாக துடிக்கும் டிடெக்டிவ் செய்யும் துப்பறிவை த்ரில்லர் சேர்ந்த காமெடியாக காட்டியது தான் ஏஜென்ட் கண்ணாயிரம்.
ஏஜென்ட் கண்ணாயிரம், தெலுங்கில் வெளிவந்த ஏஜென்ட் சாய் சீரினிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கிராமத்தில் நடக்கும் சிறிய குற்றங்களை துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரத்தில் நிலைமை தினமும் வானொலியில் விளம்பரம் செய்யும் வகையில் உள்ளது. பத்திரிக்கையாளராக இருக்கும் தன் நண்பனின் உதவியால் ஆங்கெங்க நடக்கும் குற்றங்களைக் கண்டுபிடித்து பிரபலமாக துடிக்கிறார்.
எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற இவருக்கு பத்திரிக்கையாளர் நண்பர் மூலம் மர்மமான ரயில் தண்டவாள கேஸ் கிடைக்கிறது. இதன் பின்னணியை உடைக்கும் த்ரில்லர் ஜானர் தான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஆகும். சந்தானத்தின் நடிப்பு நம்மை எளிதில் கதைக்குள் இழுத்து சென்றாலும் திரைக்கதை ஆரம்பத்தில் இருக்கும் தொய்வு சற்று குறையாக உள்ளது. ஆனால் தெளிவான திரைக்கதை நம்மை ஒவ்வொரு நிமிடமும் அடுத்த என்ன நடக்கும் என்ற கோணத்தில் வைக்கிறது. சந்தானத்தின் உதவியாளராக வரும் கதாநாயகி ரியா சுமன் நடிப்பு கதைக்கு ஏற்ற யதார்த்தமாகும்.
தன் நண்பனின் உதவியால் மெடிக்கல் மாவியாவை கண்டுபிடிக்கும் சந்தானம் என்ன செய்ய போகிறார் என்ற பயணம் தான் படத்தின் மையமாகும். அந்த மையத்தை தாங்கும் மையப்புள்ளியாக சந்தானத்தின் நடிப்பு கவர்ந்துள்ளது.
சாமானியனைத் தொட்டால் யாரும் வரமாட்டார்கள் என நடக்கும் மெடிக்கல் மாஃபியா மற்றும் அதன் பின்னணியை நகைச்சுவை கலந்த நோக்கத்தில் கொண்டு வந்த இயக்குநர் பாராட்டுக்கு உரியவர்.
Acting
Direction