Aadhaar Movie Review
இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஆதார்’ படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கருணாஸூக்கு -கனமான கதாபாத்திரம். கைக்குழந்தையோடு மனைவியை தேடி பரிதவிப்பது, காவல்நிலையத்தில் மனைவியை மீட்டெடுக்க கெஞ்சுவது, அதிகாரவர்க்கத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத இயலாமை என பல இடங்களில் கருணாஸ் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருப்பது சிறப்பு. அதே போல இன்ஸ்பெக்டராக வரும் பாகுபலி பிரபாகரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.
ஒரு காட்சிக்கும் அடுத்தக்காட்சிக்கும் இடையே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை இறுதிவரை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ராம்நாத். முதல்பாதியில் கருணாஸ் மனைவியை தேடும் படலமும், இராண்டாம் பாதியில் அதிகாரவர்க்கமானது தன்னை தப்பிவித்துக்கொள்வதற்காக ரித்விகாவை வைத்து ஆடும் ஆட்டமும் திரைக்கதையாக நீள்கிறது.
இதற்கு முன்னதாக இதே போன்று வெளியான படங்களில் வசனங்கள் பலமாக அமைந்திருந்தன. ஆதாரில் அது மிஸ்ஸிங். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை ஓரளவு கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியமும், வேகமும் இருந்திருந்தால் ‘ஆதார்’ இன்னும் அதிகமாக கவனம் பெற்றிருக்கும்.
Story
Screenpay
Acting