Now Reading
இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !!  மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” )  திரைப்படம்

இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !!  மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் “பேட்ரியாட்” ( “Patriot” )  திரைப்படம்

ஏப்ரல் 23, 2026 அன்று திரையரங்குளில் வெளியாகிறது !!

இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் “பேட்ரியாட்” -படத்தின் அதிகாரப்பூர்வ  வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம், 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தின் தமிழ் போஸ்டரை அட்லீயும், தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டாவும் , ஹிந்தி போஸ்டரை கரண் ஜோர்ரும் வெளியிட்டனர். மலையாளத்தில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பாசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வேய்ன், நஸ்லென், நஸ்ரியா நசீம், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் வெளியீட்டு தேதி போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், இப்படத்திலிருந்து முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

இந்த திரைப்படத்தை Anto Joseph Film Company மற்றும் Kichappu Films சார்பில், அன்டோ ஜோசப் மற்றும் K. G. அனில்குமார் தயாரித்துள்ளனர். இணைத் தயாரிப்பாளர்களாக C. R. Salim Productions மற்றும் Blue Tigers London நிறுவனங்களின் கீழ் C. R. சலீம் மற்றும் சுபாஷ் ஜார்ஜ் மானுவல் செயல்பட்டுள்ளனர். நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: C. V. சாரதி மற்றும் ராஜேஷ் கிருஷ்ணா.

17 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி மற்றும் மோகன்லால் மீண்டும் இணையும் இந்த படம், மலையாள சினிமாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஒரு வருடத்துக்கும் மேலாக, 10-க்கும் மேற்பட்ட கட்டங்களாக பல நாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புக்குப் பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. Twenty:20 திரைப்படத்திற்குப் பிறகு, மலையாள சினிமாவின் பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் மற்றொரு படமாக  இப்படம் அமைந்துள்ளது.

மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் ஆகியோருடன், ரேவதி, ஜினு ஜோசப், டானிஷ் ஹுசைன், ஷஹீன் சித்திக், சனல் அமன், தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப் மற்றும் Madras Cafe, Pathaan ஆகிய படங்களின் மூலம் பிரபலமான நாடகக் கலைஞரும் இயக்குநருமான பிரகாஷ் பெலவாடியும் நடிகர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Take Off மற்றும் Malik படங்களுக்குப் பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் “பேட்ரியாட்” திரைப்படத்தை சர்வதேச அளவிலான ஸ்பை திரில்லர் (Spy Thriller) படமாக, விரிந்த களத்துடன் மற்றும் நவீன தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கியுள்ளார். அதிகமான நாடுகளில் படமாக்கப்பட்ட மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை,The  UK, அசர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)  ஆகிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றுள்ளது. 2024 நவம்பரில் இலங்கையில் தொடங்கிய படப்பிடிப்பு, இந்தியாவில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் நடைபெற்றது.

முன்னதாக வெளியான “பேட்ரியாட்” திரைப்படத்தின் டைட்டில் டீசர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மம்மூட்டி மற்றும் மோகன்லால் நடித்துள்ள சக்திவாய்ந்த அதிரடி காட்சிகள் படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்பதை டீசர் சுட்டிக்காட்டியது. இரு ஆளுமைகளையும் முழு கம்பீரத்துடன் காட்டிய அந்த டீசர், மலையாள சினிமாவிற்கு இதுவரை இல்லாத தொழில்நுட்ப சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி இப்படம் சிறப்பான அனுபவமாக இருக்குமென உறுதி அளித்தது. இந்த திரைப்படத்தின் திரைக்கதையையும் இயக்குநர் மகேஷ் நாராயணன் தானே எழுதியுள்ளார்.

திரைப்படத்தின் இசையமைப்பை, முன்னணி மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் செய்துள்ளார். ஒளிப்பதிவை, முக்கிய பாலிவுட் படங்களில் பணியாற்றிய மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் பணியை மகேஷ் நாராயணன் மற்றும் ராகுல் ராதாகிருஷ்ணன் செய்துள்ளனர். வெளிநாடுகளில் படத்தை விநியோகிக்கும் பொறுப்பை Truth Global Films மேற்கொள்கிறது.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு: மனுஷ் நந்தன்

இசை: சுஷின் ஷியாம்

எடிட்டிங்: மகேஷ் நாராயணன், ராகுல் ராதாகிருஷ்ணன்

கலை இயக்கம்: ஷாஜி நடுவில், ஜிபின் ஜேக்கப்

ஒலி: விஷ்ணு கோவிந்த்

தயாரிப்பு கட்டுப்பாடு: டிக்சன் போடுதாஸ்

லைன் புரொட்யூசர்கள்: சுனில் சிங், நிரூப் பின்டோ, ஜஸ்டின் போபன், ஜெஸ்வின் போபன்

சிங் சவுண்ட்: வைஷாக் P. V.

மேக்கப்: ரஞ்சித் அம்பாடி

பாடல் வரிகள்: அன்வர் அலி

ஆக்ஷன்: திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, மாஃபியா சசி, ரியாஸ் ஹபீப்

See Also

உடை வடிவமைப்பு: தன்யா பாலகிருஷ்ணன்

நடன அமைப்பு: ஷோபி பவுல்ராஜ்

முதன்மை துணை இயக்குநர்: லினு ஆண்டனி

துணை இயக்குநர்: பேண்டம் பிரவீண்

ஸ்டில்ஸ்: நவீன் முரளி

VFX: Firefly, Egg White, Ident VFX Lab

DI கலரிஸ்ட்: ஆஷிர்வாத் ஹட்கர்

விளம்பர வடிவமைப்பு: Aesthetic குஞ்சம்மா

டிஜிட்டல் PR: விஷ்ணு சுகதன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

இந்த திரைப்படத்தை Ann Mega Media நிறுவனம் விநியோகிக்கிறது

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)