Now Reading
லீக் ஆன விஜய் ஆண்டனியின் புதிய படபிடிப்பின் வீடியோ…!

லீக் ஆன விஜய் ஆண்டனியின் புதிய படபிடிப்பின் வீடியோ…!

பிசியான ஹீரோவாக விஜய் ஆண்டனி, அடுத்து நடிக்கும் திரைப்படம் ‘வள்ளி மயில்’. கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் படங்களை கொடுத்து வரும்  சுசீந்திரன்  இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சத்யராஜ், பாரதிராஜா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தெலுங்கில் ‘ஜதி ரத்னலு’ படத்தின் மூலம் பிரபலமான ஃபரியா அப்துல்லா  இந்த படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களுடன் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரித்து வருகிறார்.

See Also

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியில் தொடங்கியது. தற்போது இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு கிராம சந்தை போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின் வீடியோ ஒன்று தற்போது லீக்காகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)