Now Reading
நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் தற்கொலை

நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் தற்கொலை

மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ 26 வயதை நிரம்பியவர். ஆலப்புழாவைச் சேர்ந்த ஷெரின் கடந்த ஐந்து ஆண்டுகளாக கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

sherin,sherin mathews,suicide,model sherin,kerala,ஷெரின்

இந்நிலையில், கடந்த மே17 ஆம் தேதி காலை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஷெரின் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் கிடைத்த தடையங்களைச் சேகரித்துக் கொண்டபின், ஷெரினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முன், நண்பர்கள் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக ஷெரின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார்.

See Also

மேலும், தனது இணையதள கணக்குகளில் மனவருத்தத்துடன் பல பதிவுகள் பகிர்ந்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து கொச்சி பாலேரி வட்டம் போலீசார் ஷெரினுக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பல கட்டங்களாக விசாரணை நடத்தினர். அதில், ஷெரினுக்கு ஒரு காதலன் இருப்பது குறித்து தெரியவந்தது. காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கினர்.

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)