கேன்ஸ் விழாவில் கண்கவரும் உடையில் இந்திய நடிகைகள்!

75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழா, பிரான்சில் கடந்த 17-ம் தேதி முதல் துவங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்வதும், தங்களது படம் இந்த விழாவில் திரையிடப்படுவதும் ஒவ்வொரு திரைக்கலைஞர்களின் கனவாகவும், பெருமையாகவும் இருந்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு இந்தியாவிலிருந்து ஏகப்பட்ட நட்சத்திர பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்
கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக், மாதவன், ஐஸ்வர்யா ராய், தீபிகோ படுகோனே, ஊர்வசி ரௌதாலா, தமன்னா, பூஜா ஹெக்டே, இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ரிக்கி கேஜ், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் இந்திய திரை நட்சத்திரங்கள் கறுப்புநிற உடையில் வந்து, நிகழ்ச்சியை கொள்ளை கொண்டனர். முன்னாள் உலக அழகியும், இந்திய நடிகையுமான ஐஸ்வர்யா ராய் வழக்கம் போல், அழகிய உடையில் வந்து ரசிகர்களின் மனதை வென்றார். கறுப்புநிற கவுனில் பூ போட்ட உடையுடன் வந்து கலக்கினார்.இதேபோல், தீபிகா படுகோனே கறுப்பு நிற பேண்ட் ஷர்ட் போன்ற உடையில் எளிமையாக வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழ், தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகையான தமன்னா பாட்டீயாதான் சிவப்பு கம்பள வரவேற்பில் மாஸ் காட்டினார். நேற்று முன்தினம் வெள்ளை கறுப்புநிற உடையில் வந்த அவர், இன்று முழுமையான கறுப்புநிற உடையில் வந்து பார்வையாளர்களை உருக வைத்தார்.
பாலிவுட் நடிகையும் தற்போது ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்து வருபவருமான ஊர்வசி ரௌதாலா, நேற்று வெள்ளை நிற உடையில் வந்த நிலையில்,
இதேபோல் நடிகை பூஜா ஹெக்டே இந்த கேன்ஸ் விழாவில் முதன்முறையாக கலந்துகொள்வதை முன்னிட்டு லைட் பிங்க் வெள்ளை கலந்த நீண்ட உடையில் வந்து, சிவப்பு கம்பள வரவேற்பில் தேவதைப்போல் காட்சியளித்தார்.
மேலும் கேன்ஸ் விழாவில் இந்தியா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான் பாட, தீபிகா படுகோனே, ஊர்வசி ரௌதாலா, பூஜா ஹெக்டே, தமன்னா ஆகியோர் நடனமாடினர்.