Now Reading
ரவுடி பேபி பாடலை முடக்கிய ஹேக்கர்ஸ்

ரவுடி பேபி பாடலை முடக்கிய ஹேக்கர்ஸ்

நடிகர் தனுஷ் நடிப்பில்  கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் மாரி-2. மாரி முதல் பாகத்துக்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டியெங்கும் பாப்புலர் ஆனது. தனுஷ் மற்றும் தீ பாடிய இப்பாடலை தனுஷே எழுதியும் இருந்தார். பிரபுதேவா நடன இயக்குநராக பணிபுரிந்த இப்பாடலில் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவியின் நடனம் நல்ல கவனம் பெற்றது.

இணையத்தைத் துவம்சம் செய்த இந்தப்பாடல்,  யூடியூப்பில் மிக விரைவில் அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ்ப்பாடல் எனும் சாதனையை அப்போது படைத்திருந்தது.

See Also

இந்நிலையில் தனுஷின் ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் முடக்கப்பட்டுள்ளது. அப்பாடல் மட்டுமல்லாமல் அதனை வெளியிட்ட wunderbar films சானலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடக்கம் இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)