Now Reading
டான் விமர்சனம்- கடைசி பெஞ்ச் மாணவனின் வெற்றி!

டான் விமர்சனம்- கடைசி பெஞ்ச் மாணவனின் வெற்றி!

சிவகார்த்திகேயன் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட். அவ்ளோவா படிக்க மாட்டார். ஆனா, அவர் அப்பா சமுத்திரக்கனி ரொம்ப கண்டிப்பானவர். மகன் படிச்சு நல்ல மார்க் எடுத்துப் பெரிய ஆளாகணும்னு நினைக்கிறார்.  அப்பா இம்சை தாங்க முடியாம பையன் சில தகிடுதத்தங்கள்லாம் செய்து ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சா போதும்னு நினைக்கிறார்.

ஆனா, சமுத்திரக்கனி இன்ஜினீயரிங் காலேஜ்லயே அட்மிஷன் போடுறார். அங்கே பார்த்தா சமுத்திரக்கனியை விட ஒழுக்கம், கட்டுப்பாடுன்னு ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் பேராசிரியர் எஸ்.ஜே.சூர்யா கல்லூரியையே காலடிக்குக் கீழே கொண்டு வர்றார். அந்தக் கட்டுப்பாடுகள் சிவகார்த்திகேயனுக்கு எரிச்சலையும், கடுப்பையும் கொடுக்குது. அதனால் ரெண்டு பேருக்கும் ஆரம்பமாகும் மோதல் பெருசா வெடிக்குது.

ஏகப்பட்ட அரியர்களுடன் இருக்கும் சிவகார்த்திகேயன் அதையெல்லாம் க்ளியர் பண்ணாரா, டிகிரி வாங்கினாரா, அவருக்குள்ள இருக்குற திறமையைக் கண்டுபிடிச்சு பெரிய ஆள் ஆனாராங்கிறதுதான் திரைக்கதை.ஆனால் இறுதியில் படம் ரொம்ப சென்டிமென்ட்டாக மாறிவிடுகிறது. இருப்பினும் அது கதையை தடம் மாறிச் செல்ல வைக்கவில்லை. சிபி சக்ரவர்த்தி படத்தை கொண்டு சென்ற விதம் ரசிக்கும்படி இருக்கிறது

See Also

 சில படங்களின் சாயல்கள் இருக்குறதையும் தவிர்க்க முடியலை.  நண்பன், எம்டன் மகன் படங்களை அதிகம் ஞாபகப்படுத்துது.

இப்படி ஒரு காலேஜ் படம் வந்து எவ்ளோ நாளாச்சு? பழைய விஷயங்களை அசை போட,  மலரும் நினைவுகளைக் கொண்டுவந்த விதத்துல சிபி சக்கரவர்த்தி ஜெயிச்சிருக்கார்.

0
Good
51100
Pros

S.J.Surya Acting

Music

Samuthirakani Acting

Cons

Story

Screen Play

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)