Now Reading
ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நடிப்பில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ படப்பிடிப்பை இன்று  பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற பூஜையில் படக்குழுவினரோடு  திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்தப் புதிய கூட்டணி ரசிகர்களிடையே  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையோடு, வலுவான உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையில் நடிக்கிறார். விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட், இப்படத்தின் கதை, திரைக்கதை  இயக்கத்தை மேற்கொள்கிறார்.

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’, அப்பா – மகன் உறவின் ஆழமான பாசம், குடும்ப உறவுகளின் வலிமை மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகிறது. குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

K. குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஒளிப்பதிவை M. சுகுமார் கவனிக்கிறார். படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை K.B.நந்தபாலன், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் கவனிக்கின்றனர். ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்ள,  புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

See Also

இன்று நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் படத்தின் பணிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

வலுவான கதை, திறமையான நடிகர்கள், அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தரமான தயாரிப்புடன் உருவாகும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாகவும், தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க குடும்ப உணர்வுப் படமாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)