Now Reading
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்த ‘பெத்தி’ (Peddi) படத்தின் ‘ரை ரை ரா ரா’ அறிமுகப் பாடல் – 46.1 மில்லியன் பார்வைகளுடன் தென்னிந்திய சாதனைகளை தகர்த்தது !

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்த ‘பெத்தி’ (Peddi) படத்தின் ‘ரை ரை ரா ரா’ அறிமுகப் பாடல் – 46.1 மில்லியன் பார்வைகளுடன் தென்னிந்திய சாதனைகளை தகர்த்தது !

‘பெத்தி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் சூப்பர் ஹிட் – 46M+ பார்வைகளுடன் டிரெண்டிங்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடனமாடுவது மட்டும் அல்ல, திரையை முழுவதும் தனது ‘ரிதம்’ மூலம் ஆளும் தனித்துவமான ஸ்டைல் கொண்டவர். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பான்-இந்தியா திரைப்படமான பெத்தி படத்தின் முதல் சிங்கிள் ‘சிக்கிரி சிக்கிரி’ வெளியானபோது, அவரது கிரேஸ், பவர், மற்றும் ஆளுமை ஒன்று சேர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்தப் பாடல் உடனே வைரலாகி, அடுத்த பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் ‘ரை ரை ரா ரா’ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாடல் ஐந்து மொழிகளில் சேர்த்து 46.1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 800K+ லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் மட்டும் 29.21 மில்லியன் பார்வைகள் பெற்று, முன்பு ‘‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற 29.1 மில்லியன் பார்வை சாதனையை முறியடித்துள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலுக்கு மின்னல் போன்ற அதிரடியான இசையை வழங்கியுள்ளார். சக்திவாய்ந்த பீட்ஸ் மற்றும் ஆற்றல் மிக்க இசையுடன், அவர் குரலும் இணைந்து இந்தப் பாடலின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. தமிழில் பாடலாசிரியர் விவேக் மற்றும் தெலுங்கில் பாடலாசிரியர் அனந்த ஸ்ரீராம் எழுதிய வரிகள் பாடலுக்கு வலிமையையும் ஆழத்தையும் தருகின்றன.

ராம் சரண் இந்தப் பாடலில் முழுமையான ஸ்டைலுடன் திரை அதிரும் அளவுக்கு ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். அதிரடியும் ரிதமும் கலந்து வரும் அவரது நடனங்கள் ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. ஜானி மாஸ்டர் வடிவமைத்த கடினமான நடன அமைப்புகளை அவர் மிகவும் எளிதாகவும் அதிரடியாகவும் ஆடியுள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு சனா ( Buchi Babu Sana) தனது இயல்பான கிராமத்து தன்மையுடன் பிரமாண்டமான காட்சியமைப்புகள் மூலம் இந்தப் பாடலை மேலும் வலுப்படுத்தியுள்ளார். பாடல் முழுவதும் இயற்கையான மண்மனத்துடன், கண்களுக்கு அழகான காட்சிகளால் சமூக வலைதளங்களை ஆளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

See Also

வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் “பெத்தி” திரைப்படம் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

 

YouTube player
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)